Header Ads



மைத்திரிபால சிறிசேனவை, வன்மையாக கண்டிக்கின்றோம் - வாசுதேவ

மனச்சாட்சிபடி செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒழுக்கப் பிரச்சினையை பயன்படுத்தி தடுக்க முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம் என வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.

நாராஹென்பிட்டி அபயராம விகாரையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய வாசுதேவ நாணயக்கார,

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சிக்கு வருவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தடுத்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெறும் எனக் கூறினார்கள், ஆனால் மைத்திரி, முன்னணியை தோல்வியடைய செய்தார்.

அத்துடன் மைத்திரிபால சிறிசேன, ஒழுக்கப் பிரச்சினையை மையப்படுத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பணிய வைக்க முயற்சித்து வருகிறார்.

மனச்சாட்சிபடி செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒழுக்கப் பிரச்சினையை பயன்படுத்தி தடுக்க முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம் எனவும் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.

4 comments:

  1. podangoyyala...neeye oru vangurottu...ithu vera

    ReplyDelete
  2. Is there a political party called LSSP?

    ReplyDelete
  3. If the P.Members are not disciplined, how come they will guide the people. So what MY3 should be praised, Rather you are telling not to worry the discipline of the members? You also should be sacked for this action.

    ReplyDelete
  4. What a surprise! Do u have deciplin?

    ReplyDelete

Powered by Blogger.