முஸ்லிம் அரசியல்வாதிகளை களையெடுக்க கிளம்பியிருக்கும் இவர்கள் யார்..?
-Akurana Nazlan-
கடந்த சில வருடங்களாக அக்குரனையில் பல்வேறு அரசியல் களையெடுக்கும் வேலையை ஒரு சில இயக்கங்கள் மற்றும் சிலர் இனைந்து மிக நேர்த்தியாக செய்து வந்ததின் பயனாக அக்குரனையின் பெயர் சொல்லகூடிய பல்வேறு பிரதேச சபை மற்றும் மாகான சபை அரசியல்வாதிகள் மாயமாய் போனார்கள்
இப்படி செய்தது அந்த இயக்கங்களின் வெற்றியா? அல்லது அக்குரனை மக்களின் தோல்வியா? என்ற கேள்விக்கு கூட விடை கிடைக்காத இந்த நிலையில் தற்போது அவர்கள் விருத்தியடைந்து எதிர்காலத்தில் தங்களது அரசியல் கால்தடதிற்காக மிக நேர்த்தியாக காய் நகர்த்தும் இவர்கள் கண்டி மாவட்ட அமைச்சர்களை கூட மாற்றி அமைக்க வேண்டும் என்ற நோக்குடன் தற்போது மக்கள் மத்தியில் விதைக்கும் கருத்து மு.கா தலைவர் ரவூப் ஹகீம் கண்டிக்கு வேண்டாம் இக்கருத்தை மக்கள் மத்தியில் ஆழமாக பதிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அவர்கள் யார் எதற்காக இதை செய்கிறார்கள் என்று ஆராய்ந்தால் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் சுய இலாபத்திற்காகவும் அவர்களது எதிர்கால அரசியல் பிரவேசதிற்காகவும் என்பது கவலைக்குரிய விடயமே
இவர்களது இந்த அரசியல் விளையாட்டில் மத்திய மாகாண முஸ்லிம்களாகிய எமக்கு எதிர்காலத்தில் கிடைக்க இருப்பது அரசியல் அனாதைகள் என்ற பட்டம் ஒன்று தான்
ரவூப் ஹகீம் அவர்கள் கண்டியில் போட்டியிடுவாரா? இல்லையா? என்பது ஒரு பக்கம் இருக்க ஹகீமை நீங்கள் எதற்காக எதிர்கின்றீர்கள் என்று கேட்டால் பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள் அதில் முக்கியமாக நாம் பல நூறு கோடி ரூபாய்களுக்கு திட்டங்களை வகுத்து கொடுத்தோம் அதை அவர் நிறைவேற்றவில்லை என்பதும் ஒன்று, அக்குரனை மக்களிடம் ஒரு பழக்கம் உண்டு அரசியல் வாதிகளிடம் எதையுமே கேட்க மாட்டார்கள் பாதைக்கு ஒளிவிளக்கு வேணும், வீட்டுக்கு தண்ணி வேணும், அரசாங்கத்தில் வேலை வேணும் என்று எதையும் கேட்க மாட்டார்கள், கேட்கணும் என்று நினைத்தால் அந்த அரசியல்வாதியின் தலை சுற்றும் அளவிற்கு கேட்பார்கள் பிறகு அந்த அரசியல் வாதியும் அந்த இடத்தில் இருந்து தப்புவதற்காக தலையை ஆட்டி விட்டு தப்பியோடிவிடுவார் (அடுத்த தேர்தல் வரும் வரை).
நீங்கள் குறைகூறும் இதே அரசியல்வாதிகளை வைத்து கிழக்கு மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்கள் எத்தனையோ அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றி இருப்பதை மறந்துவிட வேண்டாம், அப்படி இருக்க நமக்கு ஏன் இந்த நிலை என்பதை கொஞ்சம் சிந்தித்து எமது அரசியல் அணுகுமுறையை சீர்திருத்த வேண்டும் மாற்றமாக அரசியல்வாதிகளை களையெடுக்க நினைத்தால் அது மட்டும் தான் நமக்கு வேலையாக இருக்கும் , ஊருக்கோ சமூகத்திற்கோ ஒரு பலனும் கிடைக்கபோவது கிடையாது மாற்றமாக ஏனைய சமூகத்திற்கு வாய்ப்பாக மட்டுமே அமையும்.
அரசியல்வாதிகள் தவறிழைப்பவர்கள் தான் அந்த தவறுகளுக்காக தகுதி வாய்ந்த ஆரசியல் வாதிகளை கருவறுக்க நினைப்பது வரலாற்றுத்தவறு, தவறு செய்யாத அரசியல்வாதி தான் வேண்டும் என்றால் வானவர் ஒருவரை தான் தேர்தலில் நிறுத்த வேண்டும்
சரி அவர்களது கருத்தை ஏற்றுக்கொண்டு ரவூப் ஹகீம் அவர்கள் வேண்டாம் என்றால் எதிர்வரும் தேர்தலில் கண்டி மாவட்டத்திற்கு முஸ்லிம் பிரதிநிதிகளாக நாம் யாரை நம்பி இருக்கின்றோம்? பாராளமன்றத் தேர்தலிற்கு புதுமுகமான லாபிர் ஹாஜியாரையா? அல்லது அக்குரனைக்கு இல்லை என்று சொல்லாமல் இருக்கும் ஒரு அமைச்சரையா? அல்லது மாகான சபை தேர்தலில் வாக்குகளை அள்ளிக்கொண்டு மாயமாய் மறைந்தவறையா? அல்லது தற்போது தோன்றி இருக்கும் அரசியல்வாதிகளை களையெடுக்கத் துடிக்கும் கூட்டத்தையா?
இப்படி பல்வேறு பிரச்சினைகள் இருப்பதால் இயக்கங்களாக இருந்து தனி மனிதனை எதிர்ப்பதை விட மக்களிடம் தீர்ப்பை விட்டு விடுவோம் தேர்தலில் அவர்களுக்கு தேவையான அரசியல்வாதியை அவர்களே தேர்வு செய்துகொள்ளட்டும் மாற்றமாக நாம் செய்யும் ஒவ்வொன்றும் நம்மீது நாமே மண்ணை வாரி இறைப்பதற்கு சமனான காரியம் என்பதே எனது தாழ்மையான கருத்து
.jpg)
Akurana People are NO MORE fools as you say. Please find out facts correctly before you write such things in public .Don't try to exhibit your ignorance.
ReplyDeleteThis is ur own opinion let it be nazlan/we cast our vote for what? To grab everything not at all where are we in education? And rest of the development etc etc for their benefit only preach during the election and never visit to do anything also when these type of politicians looking for super luxury life why should we give him or some one else without proper development in our area /also after election can u go and see Hakeem or other ordinary mp without appointment?haa
ReplyDeleteஇவ்விடயம் குறித்து சற்று செவிசாய்க வேண்டிய கடமைப்பாடு எமக்குண்டு .......... அரசியல் பழிவாங்கலுக்கு இது நேரம் இல்லை என்று தான் தோனுகிறது ..........
ReplyDeleteWe have a own person to contest coming election.we dont wont outside people to rule our hharispattuwa.better to contest new and young fellow to parliment
ReplyDelete"அக்குரனை மக்களிடம் ஒரு பழக்கம் உண்டு அரசியல் வாதிகளிடம் எதையுமே கேட்க மாட்டார்கள் பாதைக்கு ஒளிவிளக்கு வேணும், வீட்டுக்கு தண்ணி வேணும், அரசாங்கத்தில் வேலை வேணும் என்று எதையும் கேட்க மாட்டார்கள், கேட்கணும் என்று நினைத்தால் அந்த அரசியல்வாதியின் தலை சுற்றும் அளவிற்கு கேட்பார்கள் பிறகு அந்த அரசியல் வாதியும் அந்த இடத்தில் இருந்து தப்புவதற்காக தலையை ஆட்டி விட்டு தப்பியோடிவிடுவார் (அடுத்த தேர்தல் வரும் வரை)."
ReplyDeleteHow dare u can write like this in a national website abt our town? R u from akurana surely not. If u r then i dont have word to describe it. Ur parents will be very proud abt these remarks. Shame on u.