''ஹிஸ்புல்லாஹ்வை அடகு வைக்க வேண்டாம்''
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
முஸ்லிம்களை பற்றி கணக்கெடுக்கமால் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடாத்திய பொறியியலாளர் அப்துர் ரஹ்மாணுக்கு- பொருளாதார அபிவிருத்தி பிரதயிமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை பற்றி பேச அருகதை கிடையாது என காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சியாட் ஜேபி தெரிவித்தார்.
மக்களுக்காக குரல் கொடுக்க திராணியில்லாத ஹிஸ்புல்லாஹ்வின் கருத்துக்களை முஸ்லிம் சமூகம் கணக்கெடுக்கப் போவதில்லை என பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கைக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சியாட் விடுத்துள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது .
விடுதலை புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்போடு உங்களுடைய சுயலாபத்திற்காக முஸ்லிம் சமூகத்தை சிந்திக்காமல் சீர்குழைத்ததை நீங்கள் மறந்துவிட்டிரீகளா ? பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களே இன்னொரு பிரபாகரணை உருவாக்க முயற்ச்சி செய்து கொண்டிருக்கும் கூட்டமைப்போடு நீங்கள் தொடர்பு வைத்துக்ககொண்டு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை மக்களுக்காக குரல் கொடுக்க திராணியில்லாதவர் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.
முஸ்லிம்களின் நலனுக்காகவும்,மட்டக்களப்பு மாவட்ட மக்களின் உயர்வுக்காகவும், அபிவிருத்திக்காவும் இரவு பகலாக இன மத மொழி பேதமின்றி பாடுபட்டுவரும் சிரேஷ்ட பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பணிகளை சகித்துக் கொள்ளாமல் இவ்வாறான இழிவான அறிக்கையை விட முன்வந்தமையானது உங்களின் சுயலாபத்தை தெளிவுபடுத்துகின்றது.
நீங்கள்; எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவை ஆதரிப்பது என்றால் அவரை ஆதரியுங்கள் அதைவிட்டு விட்டு உங்கள் சுய நலத்திற்காகவும், உங்களுடைய அரசியல் பழிவாங்களுக்காகவும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை அடகு வைக்க வேண்டாம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோடு முஸ்லிம் மக்கள் எந்த கோபமும் இல்லை அதை நானும் எமது நாட்டு முஸ்லிம்களும் அறிந்த விடயமே .பொது பல சேனா போன்ற அமைப்புக்களால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே காரணம் என்று எமது நாட்டு முஸ்லிம் மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
எமது நாட்டு தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் சிறு பான்மை மக்களுக்கு எதிராக செயற்படமாட்டார் என்பதை கருத்தில் கொண்டு இத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வேண்டுமெனவும்,உங்கள் அரசியல் சுயலாபத்திற்பாக பிரதியரைமச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக அறிக்கை விடுவதை நிறுத்திக் கொள்ளுமாறும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சியாட் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
.jpg)
We public saying what Br. Abdul Rahman is right....Hisbulla is selfish and shia background politician.
ReplyDeleteபேருவள பிரசினில் தன்னது உய்ரை துச்சமென மதித்து முஸ்லிம்களுக்கு உதவிய சிங்கள சகோதரை விட இந்த முஸ்லிம் தலைவர்கள் சிறந்தவர்கள் அல்ல, முஸ்லிம்கள் நன்றி மறக்க மாட்டார்கள் என்று நினைக்கண். அந்த சகோதரனின் மனம் குளிர நன்றி கடன் செய்ய வேண்டும். அரசியல் வாதிகள் யாராக இருந்தாலும் ஆபத்துக்கு உதவி செய்பவன் தான் நமக்கு தேவை அவன் முஸ்லிமாக இருந்தால் என்ன சிங்களவனாக இருந்தால் என்ன அரசியல்லில் எல்லாரும் சமன். கடந்தா காலன்க்களில் நடந்தவைகளை பார்க்கும் பொது இந்த சிங்கள சகோதரன் நமது முஸ்லிம் அரசியல் வாதிகளை விட சிறந்தவர் நன்றி உள்ளவர்.
ReplyDeleteas per your report why didn't Mr. President take action against BBS incidents in beruwala and other place incidents. Oh...! May Be Mr. President was sleeping in that days isn't he..?
ReplyDeleteசரியாச் சொன்னீங்க சியாத்....தமிழர்களை அளித்ததில் அரசாங்கத்துக்கு எவளவு பங்குண்டோ அதேயளவு பங்கு முஸ்லிம்களாகிய எங்களுக்கும் உண்டு.எங்கட முஸ்லிம் அமைச்சர்கள்தான் வெளிநாட்டுக்கெல்லாம் ஓடி ஓடி ஆயுதம் கொண்டுவந்து தமிழ் ஆக்களோட ஏரியாவை எல்லாம் மயானம் ஆக்க உதவி செஞ்சவங்க..பயங்கரவாத சட்டத்துக்கு சப்போட் பண்ணி நிறைய தமிழ் ஆக்கள உள்ள தள்ளுறதுக்கு உதவி செஞ்சோம்.இதுக்கு கைமாறாகத்தான் எங்கட ஜனாதிபதி அவங்கட கற்பனைக் கோட்டையான இணைந்த வட கிழக்கை உடச்சி கிழக்கை எங்களுக்குத் தந்து அழகு பார்க்கிறார்..இதெல்லாம் சிலருக்கு பிடிக்கல்ல அது தான் துடிக்கிறாங்க
ReplyDeleteBBS brought and running successfully By MR n His Family.. Hisbullah Doesn't care of Muslims he only want to secure his positions in the Government and work for people who around him for his Vote.. he is the real selfish....
ReplyDeleteBBS brought and running successfully By MR n His Family.. Hisbullah Doesn't care of Muslims he only want to secure his positions in the Government and work for people who around him for his Vote.. he is the real selfish....
ReplyDeleteBBS brought and running successfully By MR n His Family.. Hisbullah Doesn't care of Muslims he only want to secure his positions in the Government and work for people who around him for his Vote.. he is the real selfish....
ReplyDeleteMr. siyad,
ReplyDeleteneengal thayavu seithu Duputy Minister HISBULLAH patri pesa wendaam
neengal panathai vaanki vittu pesuringa. intha naattil BBS muslimkalukku ethiraaha seitha ella vidayamum srilankavil wasikkum anaiwarukkum theriyum,
puthithaaha neenga paadam edukka vendaam ALLAH POTHUMANAWAN, intha gonernment mannai kavilvathu suwar.
manasatsi pady paesawun illavittal moodikondu irkkawum.
umathu suya nalathukkaha pesathey. ungalaippontru oruwar oru orrukku irunthal ooraiyum muslimkalaiyum naasamakkuwathatku.
Dear Brother,
ReplyDeleteDo you know srilanka President Power ? it an Executive power, a president can do anything based on his Executive power. so he can do ban Muslim Against organization , but he did not do that ok ,so that mean
he also support that gang.
ALLREADY ADAKIL THAAN ULLAR..BALLAH
ReplyDeleteWe must be with the opposition this time,whatever may be the outcome!
ReplyDeleteஹெலோ நீங்கள் என்ன சொல்லவாறிங்கள் நீகள் எல்லாம் ஒரு முஸ்லிம் என்றுதான் பொதுமக்கள் வாக்களித்து பார்லிமேன்றுக்கு அனுப்பினார்கள் மர்ஹும் அஸ்ரப்பின் செல்ல்வாகால் அரசியலுக்கு வந்த நீங்களல்லாம் இப்போ எல்லாம் வற்றையும் மறந்துவிட்டீர்கள்
ReplyDeleteKaran please do not forget the past what happened in before you armed groups attacked to our community our youngsters was with your armed groups and they took the training in Muslim countries but when your hands up during the Indian Army time you was killed them and try to clean the Muslims in both Provinces, And go to the North-East joint provincial profile see how your officials acted in that era with the influence of LTTE
ReplyDeleteநமக்கன்று ஒரு கட்சி இருக்கிரது என்று நல்லதொரு நம்பிக்கையில் கடந்தகாலன்கால் முஸ்லிம் சமுதாயம் மார்தட்டியது ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டப்பட்ட முடிக்கிவிடப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் முஸ்லிம்களை வெளியில் சொல்லமுடியாமல் மனது குள்ளே அழவைத்தது படத்த அல்லாஹ் ஒருவனிடமே முறையிட்டு வந்தோம் தம்புள்ளை பள்ளிவாயல் உடைப்பு ஆரம்பத்தில் முஸ்லிம் தலைமைகள் ஒன்றுகூடி அரசை விட்டு விலகி இருந்தால் இந்த அரசாங்கம் அன்றே ஆட்டம் கண்டுருக்கும் அதுதான் போனாலும் இன்று இலங்கையில் நூற்றுக்கு எழுபத்தி ஐந்து வீதமான மக்கள் அரசாங்கத்தை வெறுத்து பொது வேட்பாளரை ஆத்தருக்கும் முடிவுக்கு வந்துவிட்டார்கள் இன்னும் முஸ்லிம் தலைமை என்று தனக்குத்தானே பெயர் சூட்டிக்கொண்டு இருக்கும் ரவுப் ஹகீம் ரிசார்ட் பதுர்தீன் அதாஉல்லாஹ் போன்றோர்கள் இன்னும் மஹிந்தையை விட்டு வெளியேறவில்லை இன்னும் இவர்களை சமுதாயம் நம்பி இருக்க முடியாது என்று முடிவு எடுத்துவிட்டார்கள் .மக்கள் எம்மை முந்திவிட்டார்கள் என்று இப்போதே சில கட்ச்சிகள்; புலம்ப ஆரம்பித்து விட்டார்கள் இவேர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இவேர்களை விட பன்மடங்கு திறமையுள்ள புத்தி ஜீவிகள் வெளியில் உண்டு இந்த கேடுகெட்ட சாக்கடை அரசியல் நமக்கு வேண்டாம் என்ற கொள்கையில் உள்ளார்கள் எப்போது யாரை புடின்கிவிட்டு அந்த இடத்துக்கு யாரை நியமிக்க வேண்டும் என்று அல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு தெரியும் நாங்கள்தான் முஸ்லிம்களின் ஏகோபித்த தலைவர்கல் என்று தம்பட்டம் அடிக்க தேவையில்லை அல்லாஹ்வின் முடிவுதான் இறுதியானது ...
ReplyDelete