முஸ்லிம்கள் கொதித்துப் போய் இருக்கின்றனர் - ஹசன் அலி
முஸ்லீம்களின் தனி மாவட்டக் கோரிக்கை ஒரு தனி நாட்டுக் கோரிக்கையாகக் கொள்ளக் கூடாது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
அம்பாறை முஸ்லிம்கள் தமது காரியங்களை தமது சொந்த மொழியிலேயே செய்துகொள்வதற்கு வசதியாக முஸ்லிம் காங்கிரஸினால், முன்வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கை ஒரு புதிய கோரிக்கை அல்ல
கிழக்கு மாகாண ஆட்சியமைப்பதற்கான நிபந்தனையாகக் கூட இதனை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏற்றிருந்தது.
அனைத்து முஸ்லிம்களையும் தலிபான்களாகவும், அல்கைதாகவும் பள்ளிவாசல்களை பயங்கரவாதிகளை உருவாக்கும் நிலையங்களாகவும் பார்க்கும் ஒரு போக்கு பெரும்பான்மைக் கட்சிகளின் மத்தியில் வலுத்துள்ளது
இந்த விடயத்தில் முஸ்லிம் மக்கள் கொதித்துப் போய் இருக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்
கிழக்கு மாகாணத்தில் கல்முனையை மையமாகக் கொண்டு கரையோரமாக வாழும் முஸ்லிம்களுக்கான தனியான மாவட்டம் ஒன்றை ஏற்படுத்தும் முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கையை, பிரதமர் திமு ஜயரட்ண நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
நல்லா கண்ணா மூச்சி விளையறாங்கப்பா..?
ReplyDeleteமக்களை ஏமாற்ற தற்போது முஸ்லிம் காங்கிரஸ்
போட்டிருக்கும் அடுத்த கட்ட வியூகம்தான்
தனி மாவட்டக் கோரிக்கை..
இன்னும் சில நாளில் சனாதிபதி சரிப்பா தர்ரேன் எனப்
போகிறார்.. அப்புறம் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடிக்கும்..
முஸ்லிம் கங்கிறசுக்கும் மகிந்தவுக்கு வாக்குக் கேற்க இது வசதியாப் போகும்..
தேர்தல் முடிந்த கையோட ஆழுக்கொரு அமைச்சர் பதவி கிடைக்கும்..
தனி மாவட்டக் கோரிக்கையும் ஏதேதோ காரணங்கள் சொல்லப்பட்டு
காணாமல் போகும்..
அதாங்க.. நம்ம கிழக்கு மாகாண முதலமச்சர் பதவி தாறதா சொன்னாரே
அது போலத்தான்..
அது சரிங்க.. முதல்ல கிழக்குக்கான முதலமச்சர வாங்கி எடுங்க..
அதுக்கப்புறம்.. தனி மாவட்டத்தையும் வாங்கி எடுங்க.. சொல் பேச்செல்லாம்
சரி வராது.. ஏன்னா.. அவரு இன்னைக்கும் ஆட்சியில இருக்காரு..
மனசு வச்சா நாளைக்கே உங்க கோரிக்கைய நிறைவேற்றலாம்..
முதல்ல தேர்தல்.. அப்புறம்தான்.. தனி மாவட்டம்னா.. அப்படியொரு
மாவட்டமே தேவையில்ல.. ஏன்னா.. அது கிடைக்கப் போறதும் இல்ல.
நீங்களும் உங்கள் தலைவரும் புதிதாக ஏதாவது ஒரு திட்டத்தை உருவாக்கியிருக்கிறீர்களா அல்லது நமது தலைவரின் திட்டங்களில் தான் ஏதாவது ஒன்றை உருப்படியாக நிறைவேற்றி இருக்கிறீர்களா?தலைவர் மரணமடைந்து கிட்டத்தட்ட 14 வருடங்களாக நீங்கள் செய்த சாதனை தான் என்ன நீங்களும் உங்கள் குடும்பமும் தான் பதவி,பட்டங்களை பெற்றுக்கொண்டு சுகபோகமாக வாங்கினீர்கள்.....நீங்கள் அல்லாஹ்விடத்தில் என்னத்ததான் சொல்லி தப்பிக்க போறீங்களோ.....டைமுக்கு டைம் வந்து நல்லா கதை சொல்லுவீங்க.....நமது சமுதாயம் இவர்களை நம்பி வாழ்ந்த காலம் போய் விட்டது...போதும் இனி புதிதாக ஏதாவது ஒரு மாற்று வழியை தேட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
ReplyDeleteநல்லாச் சொன்னிங்க. எதுவும் உறைக்காது முஸ்லிம்கள் மோடயன்கள் என்பது இவனுகளுக்கு நன்கு புரியும். அடஹன் எதையும் சொல்லி ஏமாத்தலாம் கடந்த காலங்களில் நடந்தவைதானே.
ReplyDeleteசரியான நேரத்தில் எடுக்கும் பிழையான முடிவும், பிழையான நேரத்தில் எடுக்கும் சரியான முடிவும் பிழையானவையே !
ReplyDelete-மர்ஹூம் எம் எச் எம் அஷ்ரப்
இது இன்றைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமத்துவர்த்திட்கோ உயர் பீடத்திற்கோ புரிந்ததாக விளங்கவில்லை . மாறாக எவ்வாறு முஸ்லிம் சமூகத்தினை தங்கள் திருகு தாளங்களால் ஏமாற்றி தங்களுக்கு தேவையான பதவிகளையும் தங்களோடு சார்ந்தவர்களுக்கு தேவையான பதவிகளையும் பெறுவதிலும் அதனை கூட்டிக்கொள்வதிலுமே தெளிவாக இருக்கிறார்கள் என்பதுதான் வெள்ளிடை மலை.இதனை கிழக்குமக்கள் குறிப்பாக ஒலுவில் ,அட்டாளைச்சேனை ,பொத்துவில் ,நிந்தவூர் மக்கள் புரிந்து கொள்வார்களா என்பதுதான் புரியவில்லை .ஊவா மாகாண முஸ்லிம்களின் தெளிவு இவர்களுக்கு நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போல அமையுமா என்பதை காலம் தான் சொல்லவேண்டும்.
முஸ்லிம் சமூகமே !
ReplyDeleteSLMC உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து இந்த ஹசன் அலி என்பவர் ஒரு தேசியப்பட்டியல் MP . இந்த சேவை உங்களுக்கு போதாதா?ஒரு தனி மனிதனின் பதவியை கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பாதுகாத்து உறுதி செய்த பெருமை SLMC யையே சாரும் .
வாழ்க SLMC !!!
வளர்க அதி உயர் பீட உறுப்பினர்களின் வசதி வாய்ப்புக்கள் !!!!!!
Sent from http://bit.ly/otv8Ik
அய்யய்யோ !! பொய்களை பசகஜ் பண்ணிகி வரனுகள்
ReplyDelete