''கராத்தேயில் ஈடுபட்டுள்ளது நான் அல்ல'' ஞானசாரர், படத்தில் இருப்பது ஞானசாரரே - இணையத்தள ஆசிரியர்
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கராத்தே தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபட்டுள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆங்கில இணையத்தளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள இந்த புகைப்படம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என ஞானசார தேரர் கூறியுள்ளார்.
உடலின் மேல் பகுதியில் காவி அணியாத பிக்கு ஒருவர் மற்றுமொரு பிக்குவிற்கு கராத்தே கற்றுக்கொடுப்பது போன்று இந்த புகைப்படம் அமைந்துள்ளது.
முகம் தெரியாத வகையில் இந்த புகைப்படத்தில் உள்ள பிக்கு காணப்பட்டாலும் தோற்றத்தில் அது ஞானசார தேரர் போன்றே உள்ளது.
எனினும் அந்த புகைப்படத்தில் இருப்பது தான் அல்ல எனவும் அதன் உண்மை தன்மை பற்றி தனக்கு தெரியாது எனவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.
அந்த புகைப்படத்தை தான் பார்த்ததும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் புகைப்படத்தின் நம்பகத்தன்மை பற்றி எந்த பிரச்சினையுமில்லை எனவும் படத்தில் இருப்பது ஞானசார தேரரே என புகைப்படத்தை வெளியிட்ட ஆங்கில இணையத்தளத்தின் ஆசிரியர் கூறியுள்ளார்.

தற்காப்புக்காக இந்த உடல் பயிற்சிய நான் செய்வதில் என்ன தவறு என்று உண்மையை சொல்ல வக்கில்லாத இடுப்பில் பலமில்லாத இந்த காமடி பீசை பாரிய வில்லன் ஸ்தானத்தில் ஆக்கிவிட்டது இந்த துப்புக்கெட்ட தலைமைத்துவம்.
ReplyDelete