வீழ்ச்சியை நோக்கி இஸ்ரேல்..!
இஸ்ரேல், காஸா மீது மேற்கொண்டுவரும் கொடூரமான தாக்குதல்களுக்கு எதிராக இனம், மதம், ஜாதி பேதங்களுக்கப்பால் மனிதாபிமானம் என்ற அடிப்படையில் அமெரிக்கா அவுஸ்திரேலியா கனடா தென்னாபிரிக்கா லன்டன் போன்ற முஸ்லிம்களைப் பெரும்பான்மையாக கொண்டல்லாத நாடுகளிலும் இன்னும் உலகின் மூலை முடுக்குகளிலும் பாரிய எதிர்ப்பலைகள் எழுப்பப்பட்டுவருகின்றது. இத்தனைக்கும் அவர்களில் அதிகமானவர்கள் முஸ்லிம்கள் அல்லாதவர்களே.
பலஸ்தீனியர்களின் பரிதாபகரமான நிலையை பற்றிய உண்மையான நிலவரங்களை அறிந்து, பலஸ்தீன சரித்திர உண்மைகளை திரித்து சீரழித்து காஸா நில ஆக்கிரமிப்புக்களை கபடமாக மேற்கொள்ளும் இஸ்ரேலிய கொடுங்கோலர்களையும் நன்றாக விளங்கிக் கொன்ட நடுநிலைபோக்கு சிந்நனைவாதிகள் இஸ்ரேலின் இந்த காட்டுமிராண்டிச் செயற்பாட்டுக்கெதிராக தங்களது கடுமையான கண்டனங்களை ஆர்ப்பாட்டங்களின் மூலமும் தனது நாட்டுக்கான இஸ்ரேல் தூதுவர்களை வெளியேற்றக் கோரியும் கோசங்களை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். இதற்காக நாம் காஸா முஸ்லிம்களின் சார்பில் இவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றோம்.
இன்னும் மேற்கத்திய நாடுகளின் ஊடகங்கள் உண்மைகளை மறைத்து, திரித்து கூறி வந்த போதிலும், சமூக வலைத்தளங்களின் ஊடாக பரவும் தகவல்களினால் குறிப்பாக இளைய தலைமுறையை சேர்ந்த யூதர்கள்களே இஸ்ரேலுக்கு எதிராக திரும்புகின்றனர் என்பதை சற்றும் நினைத்துக்கூட பார்க்காத ஷியோனிசவாதிகள் செய்வதறியாது திணறி வருகின்றனர். இவ்வாறு இஸ்ரேலுக்கு எதிராக இன்று உலகமே திரும்பியிருப்பது உலக வரலாற்றின் முதற் தடவையாகும். இஸ்ரேல் வீழ்ச்சியை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றது என்பதற்கு இதைவிட சான்றுகள் தேவையில்லை.
இன்ஷா அல்லாஹ் இதுவே அக்ஸா(பலஸ்தீனம்) வெற்றி கொள்ளப்படும் என்ற நபி(ஸல்) அவர்களின் வாக்கு மெய்ப்பிக்கப்படுவதற்கு முதற்கட்ட அடையாளமாகும்.
-அனஸ் செய்னுடீன்.

Post a Comment