Header Ads



பேஸ்புக், டுவிட்டரில் பயன்படுத்தும் புதிதாக தோன்றிய 900 வார்த்தைகள்

பேஸ்புக், டுவிட்டர் ஆகிய சமூக வலைத்தளங்கள் வருகைக்கு பிறகு அதில் மக்கள் புதிதாக உருவாக்கி பயன்படுத்தும் 900 வார்த்தைகள் ஆக்ஸ்போர்டு அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளன.ஆக்ஸ்போர்டு அகராதி குறிப்பிட்ட கால இடைவெளியில் சமூகத்தில் புழக்கத்தில் இருக்கும் புதிய புதிய வார்த்தைகளை தனது அகராதியில் சேர்த்து மேம்படுத்தி வருகிறது.

இணையதள யுகத்திற்கு பிறகு பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தி வருகின்றன. கடந்த காலத்தில் எஸ்எம்எஸ்சில்  வார்த்தைகளை சுருக்கி பயன்படுத்திய இளைய தலைமுறைகள் இன்றைக்கு இணைய தலைமுறைகளாக மாற்றம் பெற்று புதிய புதிய வார்த்தைகளை புழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து ஆக்ஸ்போர்டு அகராதி தயாரிப்பு குழுவின் தலைவர் கேதரின் கான்னர் கூறுகையில், சமூக வலைத்தளங்கள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு பல்வேறு புதிய வார்த்தைகளை மக்கள் பயன்படுத்துகின்றனர். டிக்-டாக் என்ற வார்த்தை முன்பு கடிகாரத்தின் ஒலியை குறித்து வந்தது. தற்போது செய்திகளை முழுமையாக வரிசைக்கிரமமாக தரும் செய்தியாளரை அது குறிப்பிடும் சொல்லாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது போன்று பல்வேறு புதிய சொற்கள் சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற புதிய 900 சொற்களை அகராதியில் இணைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.