கந்தளாய் பேராறு பாத்திமா பாலர் பாடசலையின் வருடாந்த சிறுவர் சந்தை
திருகோணமலை கந்தளாய் பேராறு பாத்திமா பாலர் பாடசலையின் வருடாந்த சிறுவர் சந்தை பாத்திமா பாலர் பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் இன்று இடம்பெற்றது.
மாணவர்கள் தங்களால் முடிந்த பொருட்களைக் கொண்டு பாடசாலை மைதானத்தில் கூடாரம் அமைத்து தத்தமது பொருட்களை மக்களின் காட்சிக்கு வைத்திருந்தனர். ஏதிர்காலத்தில் பிள்ளைகளின் அறிவு வளர்ச்சிக்கு இச்சந்தை உதவியாக அமையும் என கலந்து கொண்ட அதிதிகள் குறிப்பிட்டனர்.
பாத்திமா பாடசாலையின் மாணவர்களின் சமூக பொருளாதார பழக்க வழக்கங்களை மேம்படுத்தும் சமூகமாக சிறுவர் சந்தை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். சிங்கத்திபொல என்று அழைக்கப்படும் இச்சந்தையின் மூலம் இப் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு பணத்தின் பெருமதி, பொருளின் பெருமதியை அறிந்து கொள்ள முடியும்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரின் பிரத்தியேக உதவியாளர் எம்.எஸ். ஜகாங்கீர், திருமதி ஆர்.டபிள்யு.எம்.எஸ்.ரத்நாயக மற்றும் அரசியல் பிரமுவர்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் பெற்றோர்களும், பொதுமக்களும் கலந்து கொன்டனர்.




Post a Comment