தெஹிவளை தெற்கில் புதிய அஹதியா பாடசாலை ஆரம்பமாகிறது
(ஏ.எல்.எம்.தாஹிர்)
முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசமான தெஹிவளையில் தேசிய அஹதியா சம்மேளனத்தின் வழிகாட்டலின் கீழ் தெஹிவளை தெற்கு பிரதேசத்திற்கான புதிய அஹதியா பாடசாலை எதிர்வரும் 2014 பெப்ரவரி 02 திகதி ஞாயிற்றுக்கிழமை இல-16 பள்ளிதொர வீதியில் அமைந்துள்ள நோம்ஸ் கல்லூரி கட்டிட வளாகத்தில் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
முஸ்லிம் சிறார்களுக்கு சன்மார்க்க அறிவையும் நல்லொழுக்கத்தையும் வழங்குவதை நோக்காகக் கொண்டு அஹதியா பாடசாலைகள் நடாத்தப்படுகின்றன. இவை நாளைய தலைமுறையை சன்மார்க்க அறிவுடனும் தெளிவுடனும் வாழப் பயிற்றுவிக்கின்றன.
இந்த வகையில் தெஹிவளை தெற்கு அஹதியா பாடசாலைக்கு தமது பிள்ளைகளை சேர்த்துக்கொள்வதற்கு ஆர்வமுள்ள பெற்றோர் இல-16 பள்ளிதொர வீதியில் அமைந்துள்ள நோம்ஸ் கல்லூரியில் அதற்கான விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளலாம்.
கல்லூரி வார நாட்களில் மு.ப. 9.00- பி.ப. 4.00 வரை திறந்திருக்கும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை இல.16, நோம்ஸ் கல்லூரி, பள்ளிதொர வீதி, என்ற முகவரிக்கு தபால் மூலமாவோ அல்லது நேரிலோ பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
அஹதியா பாடசாலை பாடங்கள் தமிழ், சிங்களம், மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரங்களுக்கு 0112 737077, 0774 686686 தொடர்பு கொள்ளவும்.
.jpg)
Post a Comment