நாட்டின் பல பிரதேசங்களில் 9 மணி நேர மின் விநியோகத்தடை
(எம்.எம்.ஏ.ஸமட்)
வெப்ரவரி மாதத்தின் குறிக்கப்பட்ட தினங்களில் நாட்டின் குறித்த சில பிரதேசங்களில் 9 மணி நேர மின் விநியோகத்தடை ஏற்படவுள்ளது
இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை மின்சார தனியார் நிறுவனம் என்பன குறித்த பிரதேசங்களில் மேற்கொள்ள புனரமைப்;பு மற்றும் திருத்தல் நடவடிக்கைகளின் காரணமாக இம்மின் விநியோகத்தடை நிகழுமென பாவனையாளர்களுக்கு இவ்விரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.
இதன் பிரகாரம,; இலங்கை மின்சார தனியார் நிறுவனம் மேற்கொள்ளவுள்ள புனரைமப்பு மற்றும் திருத்தல் பணி காரணமாக இராஜகிரிய, வெலிகடை, எத்துல்கோட்டை, புறக்கோட்டை, கொலன்னாவை, வெல்லம்பிட்டி, கொடிக்காவத்தை, மஹரகம, பொறலஸ்கமுவ, கிரிபத்கொடை, களன,p பெகலியகொடை, மாபொல, வத்தளை, மகர, கந்தனை, வெலிசர, ஜா-எல, நீர்கொழும்பு, மொறட்டுவை, பாணந்துறை, கெசல்வத்தை களுத்துறை, அளுத்தமை, ஹிக்கடுவை, அம்பலாங்கொடை, பயாகல, காலி ஆகிய பிரதேசங்களில் பெப்ரவரி மாதத்தின் குறிக்கப்பட்ட தினங்களில் காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரையான 9 மணித்தியால மின்விநியோகத் தடை நிகழுமென இலங்கை மின்சார தனியார் நிறுவம் பாவனையாளர்களை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இது தொடர்பான விபரங்கள் தேவையுள்ள பாவனையாளர்கள் 0112574428 அல்லது 1910 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியுமென இந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன,; இலங்கை மின்சார சபை மேற்கொள்ளவுள்ள திருத்தல் பணி காரணமா ஸ்ரீஜயவர்தனபுர, ஹொரணை, பண்டாரக்கம, ஹோமாகம, அவிசாவளை, குருநாகல், குளியாப்பிட்டி, வாரியப்பொல, வென்னப்புவ, சிலாபம், புத்தளம் ஆகிய பிரதேசங்களில் பெப்ரவரி மாதத்தின் குறிக்கப்பட்ட தினங்களில் காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரையான 9 மணித்தியால மின்விநியோகத் தடை இடம்பெறுமென இலங்கை மின்சார சபை பாவனையாளர்களை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
Post a Comment