Header Ads



இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

(எம்.எம்.ஏ.ஸமட்)

ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையிலும், பல்கலைக்கழக  நுழைவுப்    பரீட்சையிலும் தகைமை பெறும் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு      புலமைப்பரிசில் வழங்கும் திட்டுத்தினை ,                                                      இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் இவ்வாண்டும் நடைமுறைப்படுத்தவுள்ளது.

இத்திட்டம் குறித்து சங்கத்தின் தலைவர் எம். அனஸ் தெரிவித்ததாவது,
தகைமை பெற்ற சங்க அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் வழங் கும் திட்டம், முன்னாள் நீதி, உயர்கல்வி அமைச்சர் மர்ஹூம் அல்-ஹாஜ் ஏ.சி.எஸ் ஹமீதினால் 1992ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.     
இதற்காக அவர் ஒரு இலட்சம் ரூபாவினையும் அன்பளிப்புச் செய்திருந்தார். சங்கம் இந்நிதியைக்கொண்டு புலமைப்பரிசில் நிதியம் ஒன்றினையும் ஆரம்பித்திருந்தது.

பல்கலைக்கழக கல்வி பயிலும் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு மாத்திரம் புல மைப் பரிசில் வழங்கவென, அதன் மூலகர்த்தாவான மர்ஹூம் ஏ.சி.எஸ்.ஹமீதினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இத்திட்டம், நிதிநிலைமை காரணமாக சிலகாலம் தடைப் பட்டிருந்தது.          
                                   
2013இல் அது, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தகைமை பெற்று, பாடசாலைக் கல்விபயிலும் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கும் புலமைப் பரிசில் வழங்கும் திட்டமாக, விரிவாக்கம் பெற்று மீண்டும் நடைமுறைக்கு வந்தது.

இவ்வாண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சை, மற்றும் 2011இல் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தகைமை பெற்ற மாணவர்களில் இருந்து ஆரம்பிக் கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு, 2013ஆம் நடைபெற்ற 5ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில்  பரீட்சையில் தகைமை பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 

தரம் 6 முதல் பாடசாலைக் கல்வி பயில வழங்கப்படவுள்ள இப்புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்க, தொடர்ச்சியாகச் சந்தா செலுத்தும் அங்கத்தவர்களின் பிள்ளைகள் தகுதியுடையவர்கள்.

மாவட்ட அங்கத்தவர் தொகை, விண்ணப்பதாரிகளின் தொகை என்பவற்றின் அடிப் படையில் வழங்;கப்படவுள்ள இப்புலமைப் பரிசில் பெறத் தகுதியானவர்கள், 077 1724715, 077 5509039 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு, விண்ணப்பத்தைப் பெற்று, 2014.03.12 க்குமுன், பொதுச் செயலாளர், இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம், 128, அன்பு வீதி, அக்கரைப்பற்று–01 (32400) எனும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.