நபிகளார் காட்டித்தந்த நியம நாள்
(அகீல்)
இஸ்லாமிய மாதத்தை ஆரம்பிப்பதற்காக நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் காட்டித் தந்த நியம நாள்.
சரியாகத் தீர்மானிக்கப்பட்ட நாள் ஒன்றை றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நியமப்படுத்தித் தந்துள்ளார்கள். அதாவது ஹி 10ம் ஆண்டு துல்ஹஜ் மாதம் முதலாம் நாளையும் அது தீர்மானிக்கப்பட்ட முறையையும் மாதத்தை ஆரம்பிப்பதற்கான நியமமாக நபிகளார் வகுத்துத் தந்துள்ளார்கள்.
நபிகளாரின் இறுதிப் பேருரையைப் பற்றிய ஒரு அறிவிப்பு ஸஹீஹ் அல் புகாரியிலே நமக்குக் காணக்கிடக்கின்றது.
“றஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்னார்கள் நேரம் சுழன்றுவிட்டது, வானங்கள் புவியைப் படைத்த நாளிலிருந்தது போன்று வந்துவிட்டது.” – பின்னர் மக்களைப் பார்த்துக் கேட்டார்கள் – “இது எந்த நாள்” – அவர்கள் நாட்களின் பெயர்களை மாற்றப்போவதாக எண்ணிய மக்கள் மௌனமாக இருந்தார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் கேட்டபோது – நீங்கள் கருதுகின்ற அதே நாள்தான் இந்த நாள் என்று மக்கள் பதிலிறுத்தார்கள். “ஓ மக்களே நீங்கள் இந்த மாதத்ததை, இந்த நாளை, இந்த நகரத்தை புனிதமாகக் கருதுவது போன்று ஒவ்வொரு முஸ்லிமுடைய உயிரையும், உடைமைகளையும், மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள். அமானிதப் பொருட்களை மீளக் கொடுத்துவிடுங்கள். யாரெல்லாம் இங்கு என்னைச் செவிமடுத்தார்களோ அவர்கள் மற்றவருக்கு எத்திவைக்கட்டும், அவர்கள் அடுத்தவருக்கு எத்தி வைக்கட்டும். இங்கு இருப்பவர்களை விட இறுதியனவர்கள் எனது வார்த்தைகளை நன்கு புரிந்து கொள்வார்களாக.”
இந்த உரை துல்ஹஜ் மாதம் 9ம் நாள் அறபாவிலே ஆற்றப்பட்டது. அந்த நாளைப் பற்றி நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சொல்கின்றபோது நேரம் என்பது வானம் புவியைப் படைத்தபோது இருந்தது போன்று வந்துவிட்டது. இந்த நாள் மிகச் சரியாக அனுஷ்டிக்கப்படுகின்றது என்பதனைத்தான் மேற்சொன்ன ஹதீஸில் நபிகளார் உறுதிப்படுத்துகின்றார்கள். அதாவது ஹி 10, துல்ஹஜ் மாதத்தின் ஆரம்பம் திருத்தமானது.
நபிகளாரின் இறுதி ஹஜ்ஜின் அறபா தினமானது வெள்ளிக் கிழமையாகும். வெள்ளிக் கிழமை 9ம் நாள் என்றிருந்தால் முதலாம் நாள் எப்போது என்பதனைப் பின்வருமாறு பார்ப்போம்

9ம் நாள் வெள்ளி, 8ம் நாள் வியாழன், 7ம் நாள் புதன், 6ம் நாள் செவ்வாய், 5ம் நாள் திங்கள், 4ம் நாள் ஞாயிறு. 3ம் நாள் சனி, 2ம் நாள் வெள்ளி, 1ம் நாள் வியாழன்.
முதலாம் நாள் வியாழன் என்றிருந்தால் புதன் மாலை சூரிய அஸ்த்தமனத்தின் பின்னர் தலைப்பிறை காணப்பட்டிருக்க வேண்டும். ஹி 10 துல்ஹஜ் என்பது ஆங்கில நாட்காட்டியில் 632ம் ஆண்டு பெப்ரவரி மாதமாகும். மக்கா நகரில் அம்மாதத்தில் வந்த அமாவாசை எத்தினத்தில் ஏற்பட்டது என்று பார்த்தோமானால், அது 632ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மக்காவில் 26ம் திகதி புதன் கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் 14ம் நிமிடத்தில் ஏற்பட்டிருக்கின்றது. அது புதன் கிழமையாகும். இதுவே அன்றைய துல்கஃதா இறுதி நாளாகவும், துல்ஹஜ் தலைப்பிறை தென்பட்ட நாளாகவும் இருந்திருக்க வேண்டும்.
குறித்த புதன் கிழமையில் தலைபிப்பிறை தெரிவதற்கான வாய்ப்புக்கள் பற்றி நோக்குவோமானால்…
மக்காவில் சூரிய அஸ்த்தமனம் மாலை 6.29 மணி
மக்காவில் சந்திர அஸ்த்தமனம் மாலை 7.04 மணி
சூரிய அஸ்த்தமனத்தின் போது அமாவாசைக்குப் பிந்திய சந்திர வயது 18 மணி. 39 நிமி.
சூரிய அஸ்த்தமனத்தின் பின்னர் சந்திரன் வானில் பயணித்த நேரம் 36 நிமிடம்.
இந்த நேர அளவுகள் உட்பட தலைப்பிறை தென்படுவதற்கான வானியல் காரணிகள் அனைத்தும் மிகவும் சாதகமானதாவே இருந்தன. வானம் தெளிவாக இருக்கும் பட்ஷத்தில் குறித்த புதன் கிழமை மக்கா நகரில் வெற்றுக் கண்களுக்குத் தலைப்பிறை தென்படும் என்பது வானியலின் எதிர்வு கூறலாகும். (வரை படம் 1) இந்த எதிர்வு கூறலுக்கு அமைவாகத் தலைப்பிறை தென்பட்டிருந்தால் மாத்திரமே வியாழன் துல்ஹஜ் முதல் நாளாகவும், 9ம் நாள் வெள்ளியாகவும் வரமுடியும்.
இந்த நவீன வானியல் தகவல்களை மாறாத ஷரீஆ விதிகளுக்குப் பிரயோகிப்போமானால் நாம் பல தீர்மானங்களுக்கு வர முடியும்.
1. வானியல் ரீதியாக சந்தரன் தனது புதிய சுற்றுகையை ஆரம்பிக்கும் அமாவாசை நாள் ஒரு இஸ்லாமிய மாதத்தின் ஆரம்பமாக இருக்குமாக இருந்தால் ஹி 10ம் ஆண்டின் முதல் நாளாக 632.02.26ம் திகதி புதன் கிழமை அமைய வேண்டும். அவ்வாறு அமைந்திருந்திருந்தால் அவ்வருட அறபா தினம் வியாழக்கிழமை வந்திருக்கும். ஆனால் அறபா தினம் வெள்ளிக் கிழமையாக இருந்தது.
எனவே, அமாவாசை நாள் இஸ்லாமிய மாதத்தின் முதல் நாள் அல்ல.
2. தேய்பிறையைத் தொடர்ந்து அவதானித்து வந்து இறுதித் தேய்பிறைக்கு அடுத்த நாள் அமாவாசை, அமாவாசைக்கு அடுத்த நாள் புதிய மாதத்தின் முதல் நாள் எனும் விதிமுறையைக் கொண்ட நாட்காட்டி முறை ஒன்றை அறிமுகப்படுத்த இக்காலத்தில் ஒரு முயற்சி நடக்கின்றது.
ஹி 10 துல்கஃதாவின் இறுதித் தேய்பிறை வெற்றுக் கண்களுக்குத் தோற்றம் தரக்கூடிய நாள் 24.02.63ம் திகதி (காலை) யாகும் (வரை படம் 2). அடுத்த நாள் 25ம் திகதி செவ்வாய்க் கிழமை சூரிய உதயத்துக்கு முன்னர் வெற்றுக் கண்களுக்கு துல் கஃதா தேய்பிறை தென்படும் சாத்தியம் இல்லை (வரை படம் 3). அதற்கு அடுத்த நாள் புதன் கிழமை துல்ஹஜ் முதல் நாளாக வந்திருந்தால் அறபா தினம் வியாழக் கிழமையாக இருந்திருக்கும். ஆனால் அவ்வாறன்றி அது வெள்ளிக் கிழமையாக இருந்தது.
எனவே, முந்திய மாதத்தின் தேய்பிறையைக் அவதானித்து புதிய மாதத்தைத் தீர்மானித்தல் இஸ்லாமிய மாத்ததை ஆரம்பிக்கும் வழிமுறைகயாகக் கொள்ள முடியாது.
3. இன்னும் சிலர் சூரிய உதயத்துக்கு முன்னர் அமாவாசை ஏற்படுமாக இருந்தால் புலருகின்ற பொழுதின் நாள் புதிய மாதத்தின் முதல் நாளாகும் என்றும், சூரிய உதயத்துக்குப் பின்னர் அமாவாசை ஏற்படுமாக இருந்தால் அடுத்த நாள் மாதத்தின் முதல் நாளாகும் என்று ஒரு விதிமுறையை முன்வைக்கின்றனர்
இந்த விதியைக் கொண்டு நோக்குவோமாக இருந்தால் குறித்த புதன்கிழமை சூரிய உதயத்துக்கு முன்னர் அமாவாசை ஏற்பட்டுவிடுகின்றது. எனவே புலருகின்ற புதன்கிழமைப் பொழுது புதிய மாதத்தின் முதல் நாளாகும். அவ்வாறெனில் ஹி 10 அறபா தினம் வியாழக்கிழமையாக வந்திருக்கும். ஆனால் அது வெள்ளிக் கிழமையாகும்.
எனவே, சூரிய உதயத்துக்கு முன்னர் அமவாசை ஏற்படுவதைக் கொண்டு புதிய மாதத்தை ஆரம்பிக்கும் நடைமுறை இஸ்லாமிய மாத்ததை ஆரம்பிப்பதற்குரியதல்ல.
ஆதலால் தலைப்பிறை எனும் சந்திர விம்பத்தை கண்களால் “வழுவின்றி” க் கண்டு புதிய மாதத்தை ஆரம்பிப்பதே நபிவழியாகும். நவீன விஞ்ஞானத்தின் அறிவைப் பிரயோகித்து நபிவழியை திருத்தமான முறையில் அமுல் செய்வோமாக.

Sago. AAGIL AVARKALUKU AVARIN FB KIDAITTHA maruppu UNGKAL paarvaikku...Ahmad Rushdhi ”வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த
ReplyDelete(பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது.
ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும்.
அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்)
மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை.
அவை துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதல்
ஆம்ராவுக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள
‘முளர்’ குலத்தாரின் ரஜப் மாதமாகும்’
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹஜ்ஜத்துல் வதாவின்போது, துல்ஹஜ் 10ஆம்
நாளான) நஹ்ருடைய நாளில் நபி(ஸல்) அவர்கள்
எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது,
‘இது எந்த மாதம் என்பதை நீங்கள் அறிவீர்களா?’ எனக்
கேட்டார்கள். நாங்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய
தூதருமே நன்கறிவர்” என்றோம். அவர்கள் அந்த மாதத்திற்கு வேறு பெயர்
சூட்டுவார்களோ என்று நாங்கள்
எண்ணுமளவிற்கு மௌனமாக இருந்துவிட்டு,
‘இது துல்ஹஜ் இல்லையா?’ என்று கேட்டார்கள்.
நாங்கள், ‘ஆம்” என்றோம். (பிறகு,) ‘இது எந்த நகரம்?’
எனக் கேட்டார்கள். அதற்கு நாங்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்றோம்.
அப்போதும், அவர்கள் அதற்கு வேறு பெயர்
சூட்டுவார்களோ என்று நாங்கள்
எண்ணுமளவிற்கு மௌனமாக இருந்துவிட்டு,
‘இது (புனிதமிக்க) நகரமல்லவா? எனக் கேட்க,
நாங்கள், ‘ஆம்” என்றோம். மேலும், ‘இது எந்த நாள்?’ என்று கேட்டார்கள். நாங்கள், ‘அல்லாஹ்வும்
அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்றோம்.
அவர்கள் அதற்கு வேறு பெயர்
சூட்டுவார்களோ என்று நாங்கள்
எண்ணுமளவிற்கு மௌனமாக இருந்துவிட்டு,
‘இது நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாள் அல்லவா?’ எனக் கேட்க, நாங்கள், ‘ஆம்” என்றோம். (பிறகு,)
‘உங்களின் புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களின்
புனிதமிக்க இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த
அளவு புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள்
உயிர்களும் உங்கள் உடைமைகளும் – உங்கள்
மானமும் – உங்களுக்குப் புனிதமானவையாகும். நீங்கள் (மறுமையில்) உங்களுடைய இறைவனைச்
சந்தீர்ப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள்
செயல்கள் குறித்து விசாரணை செய்வான்.
அறிந்து கொள்ளுங்கள்: எனக்குப் பிறகு ஒருவர்
மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும்
வழி கெட்டவர்களாய் நீங்கள் மாறிவிடாதீர்கள்.இதோ! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (நான் சொன்ன
கட்டளைகளை) அறிவித்துவிடுங்கள். ஏனெனில்,
இச்செய்தி எவரிடம் தெரிவிக்கப்படுகிறதோ அவர்,
தாம் யாரிடமிருந்து இதைக் கேட்டாரோ அவரைவிட
(அதாவது தமக்கு இதைச் சொன்னவரை விட)
நன்கு (புரிந்து) பாதுகாப்பவராயிருக்கலா Like · 8 hours ago Ahmad Rushdhi . இறுதி ஹஜ்ஜின் அரபா தினம் வியாழக்
கிழமையாகும்.. Like · 8 hours ago Ahmad Rushdhi நஹ்ருடைய தினம் என்பது ஹஜ்ஜுப் பெருநாள்
தினமாகும்..அரபா தினம் அல்ல. Like · 7 hours ago Ahmad Rushdhi ////இந்த உரை துல்ஹஜ் மாதம் 9ம் நாள்
அறபாவிலே ஆற்றப்பட்டது. அந்த நாளைப்
பற்றி நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
சொல்கின்றபோது நேரம் என்பது வானம் புவியைப்
படைத்தபோது இருந்தது போன்று வந்துவிட்டது.
இந்த நாள் மிகச் சரியாக அனுஷ்டிக்கப்படுகின்ற து என்பதனைத்தான் மேற்சொன்ன ஹதீஸில் நபிகளார்
உறுதிப்படுத்துகின்றார்கள்.///// ஊன்றி வாசித்தல்
அவசியம்..இது ஒன்பதாம் நாள்
உரை அல்ல..இது யவ்முன் நஹ்ர் எனும் துள் ஹஜ்
பத்தாம் நாள் நிகழ்ந்த்தது..இது மிகச் சரியான்
முறையை நபிகளார் அறிவித்துக் கொடுத்ததைக் காட்டுகின்றது..அதை நீங்கள் இப்போது ஏற்றுத்தான்
ஆக வேண்டும் Like · 7 hours ago Ahmad Rushdhi ஆகவே இறுதி ஹஜ்ஜின்
இதற்கு முன் சகோ ஆகில் அஹமது அவர்களின் ஆய்வு ? தான் .உ சபை இரண்டு தலைபிறை ஏற்படுத்த காரணமாக இருந்தது என்பது குறுப்பிடத் தக்கது
ReplyDelete