வெலிவேரிய துப்பாக்கிசூட்டில் பலியானது 17 வயதான மாணவன்
வெலிவேரிய பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது 17 வயதான மாணவன் ஒருவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
யக்கல சந்திரஜோதி வித்தியாலயத்தில் 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் அகில தினேஷ் என்ற வெலிவேரியவைச் சேர்ந்த மாணவனே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக நேர வகுப்பிற்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த மாணவன் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கானதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கம்பஹா சட்ட வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதுடன், துப்பாக்கி சூட்டினால் மரணம் சம்பவித்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

It's a simple cause, No need to call Army forces. If it's, What about Jaffna problem at the final day, which may be open fire to all civilion!!!!
ReplyDelete