Header Ads



ஒரு மாணவனுக்கு ஒரு கணனி வழங்கும் (OLPC) நிகழ்ச்சித்திட்ட கூட்டம்.


நாட்டிலுள்ள பின்தங்கிய பிரதேசத்து மாணவர்களும் அறிவுப்புரட்சியை நுகரும் வண்ணம் கணனித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்வி கற்கும் மகிந்த சிந்தனையின் செயல்வடிமான 'ஒரு மாணவனுக்கு ஒரு கணனியை வழங்கும் செயற்றிட்டத்தின்' மீளாய்வுக் கூட்டம் நேற்று கல்வியமைச்சில் நடைபெற்றது. இலங்கையில் மிகவும் பின்தங்கிய பிரதேசத்துப் பாடசாலைகளில் கல்வி பயிலும் தரம் 1 தொடக்கம் 5வரையிலான மாணவர்களுக்கே இவ்வாறான மடி கணனிகள் கடந்த 2009ஆம் ஆண்டின் இறுதியில் 17 பாடசாலைகளுக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்டிருந்தன. இந்தக் கணனிப் பயன்பாடுகள் மாணவர்கள் மத்தியில் எந்த நிலையில் உள்ளன என்பதை மீளாய்வு செய்யும் கூட்டம் கல்வியமைச்சின் கேட்போர் கூடலில் கல்வி மற்றும் தொடர்பாடல் தொழிற்நுட்பத்திற்கான கல்விப் பணிப்பாளர் திரு. ஜீ.எம். நீல் குணதாஸ தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில் ஆரம்பக்கல்விக்கான கல்விப்பணிப்பாளர் திருமதி பி.எம்.ஏ.எஸ். பண்டிதசேகர மற்றும் உதவிக் கல்விப்பணிப்பாளர் திருமதி லலிதாம்பிகை ஆகியோரும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் மடி கணனி வழங்கப்பட்ட 17பாடசாலைகளின் கணனிப் பிரிவுக்கான பொறுப்பாசிரியர்கள், அந்தப் பாடசாலை அமைந்துள்ள வலயக் கல்வி அலுவலகத்தில் கடமையாற்றும் ஆரம்பக்கல்விக்கான ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் கணனி இணைப்பாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டுள்ள இம்மடிகணனி மூலம் மாணவர்கள் இலகுவாக கற்றலை மேற்கொள்கின்றனர் எனவும், இதனை விரிவுபடுத்தி அனைத்து மாணவர்களுக்கும் முன்னோடித் திட்டமாக மாற்றியமைக்கவும் கருத்துரைகள் பகிரப்பட்டன. கிழக்கு மாகாணத்தில் ஒரேயொரு பாடசாலையான அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள அட்டாளைச்சேனைக் கோட்டத்தில் அமைந்துள்ள சின்னப்பாலமுனை தாறுல்ஹஸனாத் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 98 மாணவர்களுக்கே இம்மடிகணனிகள் வழங்கப்பட்டிருந்தன. மேற்படி நிகழ்வுகளில் அக்கரைப்பற்று கல்வி வலயத்திலிருந்து ஆரம்பக்கல்விக்கான ஆசிரிய ஆலோசகரான எஸ்.எல்.மன்சூர் மற்றும் கணனி இணைப்பாளர் எம்.ஐ. நாஸர் ஆகியோரும் கலந்து கொண்டு கணனியூடான கற்றல் மேம்பாட்டின் பயன்கள் பற்றியும் மாணவர்களின் அடைவுமட்ட அதிகரிப்பு பற்றியும் மேற்படி கருத்தரங்கில் இவர்களால் முன்வைக்கப்பட்டன.



1 comment:

  1. கலாச்சார சீர்கேடுகளுக்கு வழிவகுக்கும்......
    இலங்கை தாய் நாட்டில் இதுவரைகாலமும் இல்லாத அளவு சீர்கேடுகள் உருவாகுவதற்கு வழிவகுக்கும்....
    தயவு செய்து இத்திட்டம் வேண்டாம்....

    ReplyDelete

Powered by Blogger.