Header Ads



நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கவனத்திற்கு..!


(ஏ.எஸ்.எம்.ஜாவித்)    

மன்னார் மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக ஒரு நிரந்தரக் கட்டிடம் இன்றி மன்னார் மாவட்ட காதி நீதிமன்றச் செயற்பாடுகள் இயங்கிவருகின்றது.

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் கடந்த 1990 ஆம் ஆண்டு விரட்டியடிக்கப்பட்ட பின்னர் கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்த வெற்றிக்குப் பின்னர் மன்னார் மாவட்டத்திற்கு முஸ்லிம் மக்கள் சிறுகச்சிறுக மீள் குடியேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலைமையில் மக்கள் தொகை அதிகரித்து வருகின்ற நிலையில் நீதி மன்ற செயற்பாடுகளும் அதிகரித்த வன்னமுள்ளது.

விவாகம், விவாகரத்து விடயங்கள் அதன் மூலம் ஏற்படும் சொத்துப்பிரிவு, விவாகரத்து ஏற்பட்டால் அதற்காக வழங்கப்படவேண்டிய  தாபரிப்பு பணம் வழங்கவது தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் இங்கு விசாரணைகளுக்கு எடுக்கப்படுகின்றன.

அதிகமான பெண்கள் தமது குழந்தைகளுடன்  ஒவ்வொரு வாரமும் சனிக் கிழமைகளில் கூடும் மேற்படி அமர்களுக்கு வருவதாகவும்  சுமார் 10 தொடக்கம் 15 பிரச்சினைகள் வாராவாரம் கிடைக்கப் பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு தமது கடமைகளை செய்வதற்கு உரிய இடவசதிகளும், தனிப்பட்ட விடயங்களை விசாரணை மேற் கொள்வதற்கான தனியான அறை வசதிகள் மற்றும் விசாரணைகளுக்கு வருபவர்கள் அமர்வதற்கான இடவசதிகளும் இல்லாது கடந்த பல வருடங்களாக மன்னார் மூர்வீதி முஹைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசலின் குர்ஆன் மத்ரசா கட்டிடத்திலேயே இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்டத்தின் காதி நீதிமன்றத்திற்கான கட்டிடத்தை அமைக்க உரிய இடவசதி இருக்கும் பட்சத்தில் அதனை அமைத்துத் தருவதற்கு நீதியமைச்சு தயாராக இருப்பதாக    தெரிவிக்கப்படுகின்றது.

எனவே மேற்படி காதி நீதிமன்ற கட்டிடத்திற்கான இடவசதியை மக்கள் நலன் கருதி  பெற்றுத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments

Powered by Blogger.