Header Ads



தென்னாபிரிக்காவில் பொலிஸாரின் அராஜகம்



மொசரம்பியா நாட்டை சேர்ந்த டாக்சி டிரைவர் மிடோ மசியா (23) இவர் தென் ஆப்பிரிக்காவில் பெனோனி என்ற இடத்தில் டாக்சி ஓட்டி வந்தார். இவரை ஒரு வழக்கு விசாரணைக்காக பெனோனி போலீசார் இபிட் என்ற இடத்தில் கைது செய்தனர். 

பின்னர் அவரை போலீஸ் வேனில் கட்டி தெருவில் தர தர வென்று இழுத்து சென்றனர். இந்த செய்தி வீடியோ காட்சியுடன் டெலிவிஷனில் ஒலிப்பரப்பானது. இதற்கிடையே, போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட டாக்சி டிரைவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். 

பின்னர் நடந்த பிரேத பரிசோதனையில், தலை மற்றும் உடலில் ஏற்பட்ட படுகாயத்தால் அவர் இறந்தது தெரியவந்தது. இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா போலீசாருக்கு உத்தரவிட்டார். 

போலீசாரின் இதுபோன்ற கொடுமைகளை ஏற்றுக் கொள்ளவோ, சகித்து கொள்ளவோ முடியாது என்றார். இதை தொடர்ந்து இச்சம்பவத்தில் தொடர்புடைய 8 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த தகவலை போலீஸ் செய்தி தொடர்பாளர் மோசல் தலாமினி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.