Header Ads



நேரடி டி.வி. நிகழ்சியில் பெண்ணுக்கு பளார் விட்ட ஆண், தண்ணீரும் ஊற்றினார் (வீடியோ)

கிரீஸ் நாட்டில்  தேர்தல் பிரசாரம் தொடர்பாக இரு கட்சிகளிடையே நடந்த டி.வி. சந்திப்பு நிகழ்ச்சியில் அடிதடி நடந்தது. இதில் ‌எதிர்க்கட்சி பெண் பிரமுகரை ஆளும்கட்சியினர் சரமாரியாக தாக்கினர். இதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த டி.வி. சானல் நேரடியாக ஒளிபரப்பி பரபரப்பினை ஏற்படுத்தியது.

கிரீஸ் நாட்டிற்கு வரும் 17ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே கடன் பிரச்னை, வேலையில்லா திண்டாட்டம் , பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றால் கீரீஸ் சிக்கித்தவிக்கிறது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு போட்டியிடும், இடது சாரி மற்றும் வலது சாரி கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரசாரம் குறித்து சந்தித்து பேசும் நிகழ்ச்சிக்கு தனியார் டி.வி. ஏற்பாடு செய்திருந்தது.

இதில் கலந்து கொண்ட இரு கட்சி பிரமுகர்களும் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண் பிரமுகர் மீது தம்ளரில் இருந்த தண்ணீரை ஒருவர் ஊற்றினார். மற்றொருவர் அதே கட்சியைச் சேர்ந்த மற்றொரு பெண் மீது கன்னத்தில் அறைந்தார். இதனை டி.வி.நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பி பரபரப்பினை ஏற்படுத்தியது.



 

1 comment:

  1. நமது நாடு முன்னேறி, இது போன்ற கேளிக்கை விருந்துகள் எல்லாம் எப்பதான் நடக்குமோ?


    சும்மா பேசிப் பேசியே காலத்தை வீணடிக்கின்றார்கள்.
    பார்க்க போரிங்கா இருக்கு.

    ReplyDelete

Powered by Blogger.