Header Ads



அம்பாறை பட்டதாரி பயிலுனர்களுக்கான ஆட்சேர்ப்பில் அரசியல் தலையீடு

பட்டதாரி பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக பத்திரிகையில் விளம்பரப்படுத்தப்பட்டு 2012/03/30 ஆம் திகதிக்கு முன்பு நிரந்தர வதிவிடத்தின் மாவட்ட செயலாளருக்கு விண்ணப்பங்களை அனுப்புமாறு கோரப்பட்டு விண்ணப்பங்களை அனுப்பிய பட்டதாரிகளில் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் சிலருக்கு மட்டுமே நேர்முகப் பரீட்சைக்கான கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

ஏனையோர் அரசியல் தலையீடுகளின் காரணமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட இரு அரசியல்வாதிகளே இந்த நியமனத்தில் தமது செல்வாக்கைச் செலுத்தியுள்ளனர்.

குறிப்பிட்ட அரசியல் வாதியின் ஊரைச் சேர்ந்த அனைவருக்கும் கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ள அதேவேளை எஞ்சிய வெற்றிடங்கள் ஏனைய பிரதேசங்களிலுள்ள அவரது ஆதரவாளர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இத்தகைய அரசியல் தலையீட்டினால் பாதிக்கப்பட்டுள்ள அம்பாரை மாவட்டத்திலுள்ள பட்டதாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான கலந்துரையாடலொன்று மருதமுனை கடற்கரையின் திறந்த வெளியில் மஃரிப் தொழுகையின் பின் இடம்பெற்றது. நீதிமன்றத்தை அணுகி பட்டதாரிப் பயிலுனர்களின் ஆட்சேர்ப்புக்கு இடைக்காலத் தடையொன்றை விதிக்க நடவடிக்கை எடுத்தல்,எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின் இந்நடவடிக்கைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளல் ஆகிய தீர்மானங்கள் இக்கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்டது.

1 comment:

  1. GO AHEAD AND DONT LET THEM TO MOVE ANY MORE LIKE THIS

    RESENTLY SUGAR FACTORY MATER LIKE THIS HAPPEND TO IRAKKAMAM FARMERS, HE (POLITICIAN)GETS PERMISSION FROM PRESIDENT TO MAKE PEDDYFIELD TO ONLY AKP AREA FARMERS.. (u can wach from IRK to AKP left side 8th mile post to 6th mile post sugar area now ,,,, paddy field... but irakkamam sugar mattar not yet soled,)

    ReplyDelete

Powered by Blogger.