இலங்கை கிரிக்கெட் அணி மீது ஏன் இந்த பாரபட்சம்..?
சி.பி. கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்ட இலங்கை கிரிக்கெட் அணி நேற்று பின்னிரவு நாட்டை வந்தடைந்துள்ளனர்.
எனினும் வீரர்களை வரவேற்க இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள் உட்பட எவரும் அங்கு சமுகமளித்திருக்கவில்லை என்பதுடன், வரவேற்புக்கான எவ்வித ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. சிங்கப்பூர் எயார் லைன்ஸ் எஸ்.கியூ 468 என்ற விமானத்திலேயே நாட்டை வந்தடைந்தனர்
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சி.பி. கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இறுதிப் போட்டிவரை முன்னேறியிருந்ததுடன், அணி வீரர்கள் அதிகமான போட்டிகளில் சிறப்பாக விளையாடியிருந்தனர். இத்தொடரின் சிறப்பாட்டக்காரராக திலகரட்ண தில்ஷான் தெரிவுசெய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இலங்கை வந்தடைந்த கிரிக்கெட் வீரர்களை வரவேற்க விமான நிலையத்தில் அதிகாரம்பெற்ற எவரும் காணப்படாமையானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், ரசிகர்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் அணிக்கு உரிய சம்பளம் வழங்கப்படாமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Post a Comment