Header Ads



அஸாருதீன் மகன் விபத்தில் சிக்கி உயிருக்கு போராட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன். இவருக்கு அசாதீன், அயாசுதீன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அயாசுதீன் தனது நண்பர் அத்னனுடன் இன்று திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிள் மிகவும் வேகமாக சென்றதால் விபத்துக்குள்ளானது.

இதில் அயாசுதீன் படுகாயம் அடைந்தார். தலையில் காயம் அடைந்த அவரது உடல்நிலை கவலை அளிக்கும் வகையில் உள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நண்பரும் மோசமான நிலையில் உள்ளார். சம்பவம் நடைபெற்றவேளை மொஹமட் அஸாருதீன் லண்டனிலிருந்ததாகவும், தற்போது அவர் உடனடியாக இந்தியாவுக்கு திரும்பியுள்ளதாகவும் இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

அசாருதீன் மகன் அயாசுதீன் சிறுவயது முதலே கார்-மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். மகன் ஆசைப்பட்டதால் அயாசுதீன் விரும்பும் மோட்டார் சைக்கிளை அசாருதீன் வாங்கிக் கொடுத்தார். அயாசுதீன் மோட்டார் சைக்கிளை அதிக வேகத்தில் ஓட்டுவார்.
 
ஐதராபாத்தில் கார்-மோட்டார் சைக்கிள் பந்தயம் நடந்தால் தவறாமல் பார்ப்பார். தந்தையைப்போல கிரிக்கெட்டிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். அசாருதீன் போலவே பேட்டிங் செய்வார். அசாருதீன் தனது மகன் அயாசுதீன் மீது அதிக பாசம் வைத்துள்ளார். ஐதராபாத்தில் இருந்தால் மகனுடன் பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்வார். கிரிக்கெட் போட்டிகளையும் அயாசுதீனுடன்தான் சென்று பார்ப்பார். இருவரும் நண்பர்கள் போல் பழகினார்கள்.

அயாசுதீன் பந்தய பிரியர் என்றாலும் யாரிடமும் அதிகம் பேச மாட்டார். அசாருதீனிடம் மட்டுமே அதிக நேரம் பேசுவார். அசாருதீன் உறவினர்கள் கூறும்போது, அயாசுதீன் எங்களுடன் நன்றாக பழகுவார். அவர் விபத்தில் சிக்கியதை அறிந்ததும் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம் என்றனர்.

No comments

Powered by Blogger.