Header Ads



மத்திய கிழக்கில் போர் நிலையை நிறைவுக்கு கொண்டுவர இலங்கை அரசாங்கம் கோரிக்கை


மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலையை நிறைவுக்கு கொண்டு வந்து உடனடியாக அமைதியான நிலையை ஏற்படுத்துமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


மத்திய கிழக்கில் போர் நிலைமைகள் துரிதமாக அதிகரித்து வருவது குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது. இது பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.


அனைத்து தரப்பினரும் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறும், பதட்டங்களைத் தணிக்க உடனடி மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை வேண்டுகோள் விடுக்கிறது. கடுமையான மனிதாபிமான மற்றும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் பரந்த பிராந்திய மோதலின் அபாயத்தைத் தடுக்க அனைத்து தரப்பினரும் மேலும் நிலைமைகளை தீவிரமடையச்செய்யும் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். என குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.