ரமழான் (11) கேள்வி
A. விடைபெறு ஹஜ்ஜின் போது, 'இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன்' (அல்-மாயிதா: 3) என்ற வசனம் இறங்கியது. இதைக் கேட்ட ஸஹாபாக்கள் அனைவரும் மார்க்கம் பூர்த்தியான மகிழ்ச்சியில் இருக்க, ஒரு நபித்தோழர் மட்டும் அதன் உள் அர்த்தத்தை விளங்கி கண்ணீர் வடித்தார். அந்த ஞானம் மிக்க நபித்தோழர் யார்? அவர் அழுததற்கான காரணம் என்ன?
B. அல்குர்ஆனைச் சரியான முறையில் விளங்குவதற்கும் (தப்சீர்), அதன் சட்டங்களை ஆய்வு செய்வதற்கும் நபித்தோழர்களும் மார்க்க அறிஞர்களும் கையாண்ட மூன்று முக்கிய மூலாதாரங்கள் அல்லது முறைமைகள் யாவை?

Post a Comment