Header Ads



இப்படியும் நல்ல பேரூந்துகள்


இந்தியா  - கேரள மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கோழிக்கோடு மலப்புறம் உட்பட மாவட்டங்களில் ரமலான் மாதத்தில் நோன்பு பிடித்து தினமும் பேரூந்தில் பயணம் செய்து வேலைக்கு சென்று மாலை வீட்டுக்கு திரும்புபவர்களுக்கு நோன்பு துறப்பது குறித்து எந்த கவலையும் இருப்பதில்லை.


ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் இயங்கும் தனியார் பேருந்துகளில் முன்புறம் "நோன்பு துறக்க வசதியுண்டு" எனும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பேரூந்துகள் அதிகம் காணமுடியும்.


ஆண்டு முழுவதும் தங்கள் பேரூந்தில் பயணம் செய்பவர்களுக்காக ரமலான் மாதத்தில்  நோன்பு துறக்கும் நேரத்தில் பேரீச்சம் பழம்,சமோசா, தண்ணீர் பாட்டில் வழங்குவது ஒரு சேவையாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


Colachel Azheem

No comments

Powered by Blogger.