Header Ads



அல்லாஹ்வின் கருணையைத் தவிர, வேறு எதுவும் இல்லாமல் வாழ்கிறோம்


ஜபாலியா குடியிருப்பாளர் தனது குடும்பத்திற்கு ‘அல்லாஹ்வின் கருணையைத் தவிர வேறு எதுவும் இல்லை’ என தெரிவித்துள்ளார்.


காசாவின் போரினால் சிதைந்த சுற்றுப்புறங்களின் இடிபாடுகளில், ரமலான், நோன்பு தொடங்கியுள்ளது. மக்கள் குர்ஆன் ஓதுவதிலும், அமல்களிலும் ஈடுபடுகின்றுனர்.


வடக்கு காசாவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் வசிக்கும் அலி ராஜிஹ் கூறுகையில், 


"இந்த ஆண்டு ரமலான் வந்துவிட்டது, நாங்கள் தங்குமிடம், வேலை, பணம், எதுவும் இல்லாமல் தெருக்களில் இருக்கிறோம்.


'எனது எட்டு குழந்தைகளும் நானும் வீடற்றவர்கள். நாங்கள் ஜபாலியா முகாமின் தெருக்களில் அல்லாஹ்வின் கருணையைத் தவிர வேறு எதுவும் இல்லாமல் வாழ்கிறோம் என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.