Header Ads



வந்ததும் சென்ற மின்சாரம் - லிப்டில் சிக்கிய பணியாளர்


ராஜகிரிய - ஆயுர்வேத வைத்தியசாலையில் மின்னுயர்த்திக்குள் சிக்கிய நபரை பணியாளர் குழு பத்திரமாக மீட்டுள்ளது.


ஞாயிற்றுக்கிழமை (09) பகல் 11 மணியளவில் தடைப்பட்ட மின்சாரம் 3 மணிநேரத்துக்குப் பின்னர் பிற்பகல் 2 மணியளவில் வழமைக்குத் திரும்பியது. எனினும் 2.10 மணியளவில் மீண்டும் மின்சாரம் தடைப்பட்டது.


இந்த குறுகிய நேரத்துக்குள் பொது கட்டிடங்களில் மின் விசிறி, மின்னுயர்த்தி உள்ளிட்டவை செயற்பட்டன.


இந்நிலையில், ராஜகிரிய ஆயுர்வேத வைத்தியசாலையில் மூன்று மாடிகளைக்கொண்ட கட்டிடத்தின்  மின்னுயர்த்திக்குள் பணியாளர் ஒருவர் 2.10க்குள்  சிக்கிக்கொண்டார். விடயமறிந்து விரைந்து செயற்பட்ட பணியாளர் குழு கடுமையான முயற்சியின் பின்னர் அவரை பத்திரமாக மீட்டெடுத்தது

No comments

Powered by Blogger.