முடிவில் அவன் எழுதி வைத்ததைத் தவிர, எதுவும் கிடைக்கப் போவதில்லை...
சொத்து செல்வம் குவிப்பதில் அதீத மோகம்...
வீடு வாசல் கட்டுவதில் பேராசை...
வாகனங்கள் வாங்க வேண்டுமென்ற பேரவா...
வசதி வாய்ப்புக்கள் மீதான நப்பாசை...
இவைகள் தான் பல சமயம் மனிதர்களை அதலபாதளம் வரை அழைத்துச் செல்கின்றன...
இதற்காகவே சிலர் ஏமாற்று வியாபாரம் செய்வார்கள்...
இன்னும் சிலர் இலஞ்சம் வாங்கி செத்துக் குவிப்பார்கள்...
வேறு சிலர் மற்றவர்களின் உடைமைகளை நியாமின்றி அபகரிக்கப்பார்கள்....
இவ்வழியில் புறப்பட்ட பலர் பாதை நடுவில் மாய்ந்து போய்விடுவார்கள்....
இன்னும் சிலர் இருந்தவைகளையும் இழந்துவிடுவார்கள்...
முடிவில் அவன் எழுதி வைத்ததைத் தவிர எதுவும் கிடைக்கப் போவதில்லை...
வெறும் கையுடன் மனிதன் உலகை விட்டும் பிரிந்து செல்கிறான்...
நல்வழியில் பொருளீட்டினால் நற்பேறு பெற்றவனாக படைத்தவனை சந்திப்பாய்...
தப்பான வழிகளில் பொருளீட்டினால் பாதகனாக படைத்தவனை சந்திப்பாய்...
(( மனிதனே! மெய்யாகவே நீ பாடுகள் பல பட்ட வண்ணம் உன் இறைவனை தரிசிக்கவே செல்கிறாய். ))
📖 அல்குர்ஆன் : 84:6
✍ தமிழாக்கம் / imran farook

Post a Comment