காசாவில் அறியப்படாத அளவில் எண்ணெய்யும், எரிவாயும் இருக்கலாம்
ஐக்கிய நாடுகள் அமைப்பின் கூற்றுப்படி,
காஸாவில் ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீன பிராந்தியங்களில் அறியப்படாத அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 2019ஆம் ஆண்டு ஐ.நா.வின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு வெளியிட்ட அறிக்கைப்படி, மூன்று பில்லியன் பேரல் அளவுக்கு எண்ணெய் வளம் அங்கு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
"நிலவியலாளர்கள், இயற்கை வளப் பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கும் பாலத்தீன பிராந்தியத்தில் மேற்குக் கரையின் சி-ஏரியா மற்றும் காஸாவின் மத்திய தரைக்கடல் கடற்கரைப் பகுதி ஆகியவை குறிப்பிடத்தக்க அளவுக்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளப்படுகையின் மீது அமைந்துள்ளது" என்று அந்த அறிக்கை கூறுகிறது.
மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள லாவன்ட் படுகையில் கண்டறியப்பட்டுள்ள புதிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு படுகைகளைச் சுட்டிக்காட்டும் அந்த அறிக்கை "2017ஆம் ஆண்டு விலை நிலவரப்படி இந்திய மதிப்பில் சுமார் 39.66 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் (453 பில்லியன் அமெரிக்க டாலர்) 122 டிரில்லியன் கனஅடி அளவுக்கான இயற்கை எரிவாயு மற்றும் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் (71 பில்லியன் அமெரிக்கடாலர்) மதிப்பிலான 1.7 பில்லியன் பேரல் எண்ணெய் வளம் இருக்கலாம்" எனக் கூறுகிறது.
டிரம்பின் பரிந்துரைகள் எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தை எடுப்பது தொடர்பானதாக இருக்கலாம் என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர்.
BBC

Post a Comment