Header Ads



வாகனக் கப்பல் இலங்கை வருகிறது, முற்பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்


எதிர்வரும் 25ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களைத் தாங்கிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


எதிர்வரும் மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் சகல வாகனங்களும் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.


அத்துடன் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் வாகனமொன்றின் விலை 5,500,000 முதல் 6,000,000 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த நாட்களில் வாகன இறக்குமதிக்கான கடன் கடிதங்கள் விடுவிக்கப்பட்டன.


இதன்படி எதிர்வரும் 2 அல்லது 3 வாரங்களின் பின்னர் தொடர்ச்சியாக வாகனங்களைக் கொண்டு வர முடியும்.


எனவே, அதுவரையில் முற்பணம் செலுத்தி மோசடியாளர்களிடம் ஏமாற வேண்டாம் என நுகர்வோரிடம் கோருவதாகவும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.