Header Ads



அதிபரை கடத்திச்சென்ற ஆசிரியர்


கம்பஹா, பியகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சியம்பலாபே பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றிற்கு அருகில் பாடசாலை அதிபர் ஒருவரை ஜீப் வாகனத்தில் கடத்திச் சென்று வீடொன்றில் அடைத்து வைத்து, தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் ஆசிரியர் உட்பட இருவர் நேற்று வெள்ளிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்தனர். 


பியகம பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


37 வயதுடைய ஆசிரியரும் 32 வயதுடைய  பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.


பாடசாலை அதிபரும் கைது செய்யப்பட்ட ஆசிரியரும் ஒரே பாடசாலையில் கடமையாற்றுவதாகவும் முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 


இது தொடர்பான மெலதிக விசாரணைகளை பியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.