Header Ads



இறைவன்தான் நாடுபவன்


படத்தில் வலதுபுறமாக இருப்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஜோசப் ஸ்டீஃ. தீவிர கிறிஸ்துவ மத போதகராக வளம் வந்த அவர் இஸ்லாத்தை கொச்சைப்படுதுவதிலும், முஸ்லிம்கள் பாலைவனத்தில் கறுப்பு பெட்டியை வழிபாடு செய்பவர்கள் என்றும் கேலி செய்து கொண்டிருந்தவர். 


படத்தில் இடதுபுறமாக இருப்பவர் சவுதியை சேர்ந்த அப்துள்ளாஹ் அல் கஸீமி என்பவர். தீவிர மார்க்கப் பிரச்சாரகராக வலம் வந்த அவர் இரண்டாம் இப்னு தைமியா என போற்றப்பட்டார். ((இஸ்லாம் மற்றும் பிற மதங்களுக்கிடையிலான மோதல்)) என்ற அவரது நூல் இஸ்லாமிய உலகில் பெரும் செல்வாக்குப் பெற்றது. 


இப்புத்தகம் மூலம் அவர் சொர்க்கத்தை விலை கொடுத்து வாங்கி விட்டார் என அறிஞர்கள் போற்றிப் புகழ்ந்தனர். 


திடீரென திசை மாறிய கஸீமி நாத்திகத்தை ஆதரித்து, கடவுள் மறுப்புக் கொள்கைக்கு வக்காலத்து வாங்க ஆரம்பித்தார். 


((கடவுளை நல்லவனாக காட்ட பொய் உரைக்கின்றனர்)), ((இவைகள்தான் கை விலங்குகள்)) என்ற இரு நூல்களை எழுதி தனது நாத்திகத்தை பகிரங்கமாக அறிவித்தார். பின்னர் 1996 ஆம் ஆண்டில் மாய்ந்து போனார். 


அதே காலப் பகுதியில் தான் டெக்ஸாஸ் மாநிலத்தில் ஜோசப் ஸ்டீஃ குடும்ப சகிதம் இஸ்லாத்தை ஏற்றார். யூசுப் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டு அவர் அமெரிக்காவில் பெரும் இஸ்லாமிய பிரச்சாரகராக மாற முடிவு செய்தார். அவரால் பலநூறு பேர் இஸ்லாத்திலும் நுழைந்தார்கள். அவர் தொகுத்து வழங்கிய பிரதான நூல்கள்:


"A யில் இருந்து z வரைக்கும் நபிகாளார் முகம்மது அவர்கள்", "கிறிஸ்துவ மத குருக்களை நோக்கி சில கேள்விகள் "

#தடம்_புரண்டவர்கள்_வரலாறு 

#من_أخبار_المنتكسين

#لا_للحور_بعد_الكور

✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.