அமெரிக்கா செல்லும் மோடிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
இந்த ஆவணப்படத்தில், அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி, கலவரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்த ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு தடை விதித்திருந்தது. இந்த நிலையில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகம் ெவளியிட்ட அறிவிப்பில், ‘பிபிசி தயாரித்துள்ள ‘இந்தியா: மோடிக்கான கேள்வி’ என்ற ஆவணப்படம், வரும் 20ம் தேதி அமெரிக்காவில் ஒளிபரப்பப்படும். இந்த ஆவணப்படத்தை பார்ப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மே மாதம், பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, பிபிசி தயாரித்த ஆவணப்படம் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் திரையிடப்பட்டது. அப்போது, இந்தியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் மற்றும் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுதல் பிரதமர் மோடியுடன் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் கோரிக்கை எழுப்பப்பட்டது.

Post a Comment