Header Ads



கிழக்கு மாகாண மக்கள் அதிகாரிகளிடம் விடுக்கும் வேண்டுகோள்

(எம்.எம்.ஏ.ஸமட்)

கிழக்கு மாகாணக் கரையோரப் பிரதேசங்களில் கடலில் நீராடுவதற்குப் பாதுகாப்பான அல்லது பாதுகாப்பற்ற இடங்களை அடையாளப்படுத்தி அறிவித்தல் பதாகைகளை இடுமாறு அதிகாரிகளிடம் பொது மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் குறிப்பிடுவதாவது,

அண்மைக்காலமாக கிழக்குக் கடலில் நீராடச் சென்று கடலலைகளில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழக்கும் துன்பியல் சம்வங்கள் அதிகரித்துச் செல்கின்றது. 

நாட்டில் நிலவுகின்ற சமாதான சூழலின் காரணமாக கிழக்கு மாகாணத்திற்கு அதிகளவிலான உள்ளுர்; மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இவர்கள் கடலில் நீராடும் ஆசையால் கடலின் எந்தப் பிரதேசம் நீடாடுவதற்குப் பாதுகாப்பானது என அறியாமல் கடலில் நீராடுகின்றனர். 

இருப்பினும், கடலில் நீராடுவோரில் பலர் கடல் அனர்த்திற்கு அகப்படாத போதிலும் சில சமயங்களில் அனர்த்தங்களுக்கு உள்ளாகின்றனர்.

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட கரையோரங்களில் கடலில் நீராடுவதற்கு பாதுகாப்பான பகுதி, பாதுகாப்பற்ற பகுதி என்ற அறிவித்தல் பதாகைகள் இடப்படுவது அவசியம்.
மட்டக்களப்பு மாவட்;டத்தின் ஒரு சில கடற்கரையோரங்களிலும் திருகோணமலை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளிலும்  இந்த அறிவித்தல் பதாகைகள் உள்ள போதிலும், அம்பாறை மாவட்டத்தின் எந்தவொரு கடற்கரைப் பிரதேசத்திலேனும் கடலில் நீராடுவதற்கு பாதுகாப்பான அல்லது பாதுகாப்பற்ற பகுதியென்ற அறிவித்தல் பாததைகளைக் காண முடியாதுள்ளது.

அனர்த்தங்கள்; நடைபெற்ற பின்னர் அவ்வனர்த்தம் ஏற்படாதிருப்பற்கான  நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அதற்கு முன்னதாக  அனர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

அந்தவகையில், கிழக்குக் கடற்கரையோரங்களில் கடலில் நீராடுவதற்கு பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற இடங்களை அடையாளம் கண்டு அது தொடர்பான மக்களை அறிவுறுத்தும் அறிவித்தல் பதாகைகைள இடுமாறு பொதுமக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேவேளை, கடற்றொழில் அமைச்சினால் ஆழ்கடல் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற உயிர் பாதுகாப்பு அங்கி வடக்கு, கிழக்கு மாகாண மீனவர்களுக்கும் விரைவாக வழங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மீனவர்கள் கோரிக்கைவிடுக்கின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது,

No comments

Powered by Blogger.