Header Ads



இருதய நோயினால் பாதிப்படைந்த 4 வயது சிறுமிக்கு உதவுவோம்..!


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காங்கேயன்னோடை பத்ர் பள்ளிவாயல் மஹல்லாவைச் சேர்ந்த கட்டிட  வேலை செய்யும் சாகோதரர் எம்.அமீன் என்பவரின் மூன்றாவது மகள் பாத்திமா நிஷா எனும் 4 வயது சிறுமி கடந்த மூன்று வருடங்களாக  இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இச்சிறுமியை பரிசோதித்த பிரபல வைத்திய நிபுனர் சிஹான் பெரயரா இவருக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றும், அதற்கு சுமார் 2  லட்சம் ரூபாய் செலவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

அன்றாடம் கட்டிட வேலை செய்யும் சாகோதரர் எம்.அமீன் ,அவரது மனைவி சகோதரி வை.சர்மிளா மற்றும் அவர்களது குடும்பத்தினால் இவ்வளவு பெரும் தொகைப் பணத்தை திரட்ட முடியாதுள்ளதாகவும் ,தனவந்தர்கள்,பண வசதி படைத்த சகோதரர்கள் ,பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை தந்துதவுமாறு அவர்களது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுகின்றனர்.

காங்கேயன்னோடை 13 பத்ர் பள்ளி வீதியில் வசிக்கும் சாகோதரர் எம்.அமீனுக்கு 11,8 ஆகிய வயதில் இரண்டு ஆண் பிள்ளைகளும் 4,1 ஆகிய வயதில் இரண்டு பெண் பிள்ளைகளுமாக மொத்தம் நான்கு பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இச்சிறுமியின் அறுவை சிகிச்சைக்கு உதவ விரும்புவோர் பின்வரும் கணக்கு இலக்கத்திற்கு அனுப்பவும்.

தொடர்புகளுக்கு முஸ்தபா அமீன் சிறுமியின் தந்தை-0771384815

NAME-MUSTHAFA AMEEN
BANK A/C NO-73521134
BANK-BANK OF CEYLON.(BOC)
NIC-810020504v





No comments

Powered by Blogger.