Header Ads



ஒஸாமா பின்லேடனின் ஜனாஸாவை கடலில் வீசிய அமெரிக்க கப்பல் இந்தியா செல்கிறது


பல்வேறு நாடுகளின் கப்பல் படையை சேர்ந்த போர்க்கப்பல்கள், கூட்டுப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். கடல் வழி மிரட்டல்கள் அதிகமாக காணப்படும் பகுதிகளில் இந்த கூட்டுப்பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.  இந்தியாவில் இதுவரை 14 முறை இதுபோன்ற பயிற்சிகள் நடைபெற்றுள்ளன. தற்போது 15-வது முறையாக கேரளா மாநிலம் மலபார் கடலில் கூட்டுப்பயிற்சி நடக்க உள்ளது.  

எக்ஸெர்சைஸ் மலபார்- 2012 என்ற பெயரிடப்பட்டுள்ள, இந்த கூட்டுப்பயிற்சியில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த போர்க்கப்பல்கள் பங்கேற்கின்றன. வங்காள விரிகுடாவில் விசாகப்பட்டினம் தொடங்கி, அந்தமான் நிகோபர் தீவுகள் வரை இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.  

இந்த கூட்டுப்பயிற்சியில் கலந்து கொள்ளும் அமெரிக்க கப்பல் படை கப்பலானது (சி.வி.என்-70), உலகிலேயே மிகப்பெரிய போர்க்கப்பல் ஆகும். 330 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பலின் மேல் தளத்தில் நிறைய போர் விமானங்களை நிறுத்தி வைக்க முடியும்.

பாகிஸ்தானில் அபோதாபாத் மாகாணத்தில் பதுங்கி இருந்தபோது, அமெரிக்க படையினர் சுற்றி வளைத்து சுட்டுக்கொன்றனர்.  உடல், இந்தியப் பெருங்கடலுக்கு அடியில், யாரும் அடையாளம் காணாத இடத்தில் புதைக்கப்பட்டது. இதற்காக, பின்லேடன் உடலை கொண்டு செல்ல இந்த கப்பல்தான் பயன்படுத்தப்பட்டது.  

கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக புறப்பட்டு வரும் அந்த கப்பல், சனிக்கிழமை (7-ந்தேதி) சென்னை துறைமுகத்தை வந்தடைகிறது. இங்கு சில மணி நேரம் அந்த கப்பல் நிறுத்தி வைக்கப்படும் என்று, இந்திய கப்பல் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்த கப்பலுடன் மேலும் இரண்டு அமெரிக்க போர்க் கப்பல்களும் வருகின்றன. அந்த கப்பல்களும் சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்படும்.

No comments

Powered by Blogger.