அரசாங்கத்தின் மற்றுமொரு மோசடி அம்பலமானது
இன்று குற்றவாளிக் கூண்டில் நிற்கும் இரு சந்தேக நபர்களும் லங்கா ஈ நியூஸ் அலுவலகம் தொடர்பிலோ அல்லது அது அமைந்திருக்கும் இடம் குறித்தோ ஒன்றுமே தெரியாத நிலையில் உள்ளனர். நாட்டின் உயர்மட்டத்தினால் மேற்கொள்ளப்படும் சில செயற்பாடுகளுக்கு அப்பாவி மக்களே இன்று பலிக் கடாக்களாக்கப்படுகின்றன. என சட்டத்தரணி சந்தியா தல்துவ இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
லங்கா ஈ நியூஸ் அலுவலகம் எரிக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட உதேனி சிசர ஜயலத் அல்லது பூதயா மற்றும் சுதந்த என்ற சூஸாத் ஆகியோர் இன்று கடுவெல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர்கள் சார்பில் தோற்றிய சட்டத்தரணியான சந்தியா தல்துவ இவ்வாறு தெரிவித்தார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரையும் பிணையில் விடுதலை செய்ய வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
சட்டத்தரணி மஞ்சுளா பத்திராஜா தனது வாதத்தை முன்வைக்கையில்,
லங்கா ஈ நியூஸ் நிறுவனம் அரசாங்கத்தின் ஊழல்களையும் மோசடிகளையும் மக்களுக்கு அம்பலப்படுத்தி வந்தது. இந்த ஊடக நிறுவனத்தில் கடமையாற்றிய ஊடகவியலாளரான பிரகீத் எக்னலி கொடை காணாமலாக்கப்பட்டார்.
லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியரான சந்துருவன் சேனாதீர பல தடவைகள் அச்சுறுத்தப்பட்டார். இதன் காரணமாக அவர் இன்று நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார். இப்போது அங்கு கடமையாற்றும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர் எனத் தெரிவித்தார்
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரையும் இம்மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Post a Comment