அர்ச்சுனா Mp க்கு செருப்பு மாலை
யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் அர்ச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகை வைக்கப்பட்டு , அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தகாத வார்த்தை பிரயோகங்கள், சபை நாகரீகமின்றி செயற்படுதல், கூட்டங்களை குழப்புதல் போன்ற செயல்களில் அர்ச்சுனா இராமநாதன் செயற்பட்டு வருவதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் , நேற்று (18) இடம்பெற்ற தெல்லிப்பளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் மிக மோசமான வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டு இருந்தமை தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறான நிலையில , அர்ச்சுனாவின் 10 அடி உயர பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, பிரதான வீதியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment