அமெரிக்காவைக் கண்டு பயமா..? JVP யின் கொள்கைகள் மாறிவிட்டனவா..?
எம்மைப் போன்ற ஒரு நாடு எக்காரணம் கொண்டும் போரில் ஒரு இடைத்தரகராகவோ அல்லது இரையாகவோ மாறக்கூடாது.
கேள்வி: ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்துவிட்டதாகத் தோன்றுகிறது. அமெரிக்காவைக் கண்டு பயமா? ஈரான் தூதுவரும் இலங்கையின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு கோரியிருந்தார்....? மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கைகள் மாறிவிட்டனவா?
அமைச்சரின் பதில்: "போர் ஒருபோதும் உலகிற்கு முன்னேற்றத்தைக் கொண்டுவரவில்லை. அரசியல் தேவைகளுக்கு மத்தியில் சாதாரண மக்களே பாதிக்கப்பட்டவர்களாக மாறினர். போரில் ஒரு பக்கத்தை ஆதரிக்க எவரும் முயற்சிக்கவில்லை. அது மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அந்த நிலைப்பாடு உங்களுடைய நிலைப்பாட்டுடன் ஒத்துப் போகாமல் இருக்கலாம். அது அரசாங்கத்தின் பிரச்சினை அல்ல. ஒரு நாடாக நாங்கள் இருக்கிறோம். எனவே, இந்தப் போர் மோதல்களைத் தவிர்ப்பதற்காக எங்கள் தரப்பில் சொல்லாலும் செயலாலும் செய்யக்கூடிய அனைத்தையும் செய்து வருகிறோம்."
அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் Dr நளிந்த ஜயதிஸ்ஸ

Post a Comment