Header Ads



இப்தார் நிகழ்வில் ஜனாதிபதிக்கு வழங்கபட்ட, சிங்கள மொழிபெயர்ப்பு குர்ஆன் பிரதி


முஸ்லிம்களின் நாளாந்த ரமலான் நோன்பு நிறைவைக் குறிக்கும் வகையில், நேற்று (18) ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.


இதன்போது ஜனாதிபதிக்கு சிங்கள மொழிபெயர்ப்பு புனித அல்குர்ஆன் பிரதியொன்றும், தாசிம் மௌலவியினால் வழங்கபட்டது


இஸ்லாமிய மதத் தலைவர்கள், அமைச்சர்கள், இராஜதந்திரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், மத வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளித்து நிகழ்வு நடைபெற்றது.


பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி இதன்போது வரவேற்புரை  நிகழ்த்தியதுடன் சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் இங்கு உரையாற்றினார்.


இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்களுடன் ஜனாதிபதி சுமுகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

No comments

Powered by Blogger.