Header Ads



கடலில் ஒரு அட்டூழியத்தைச் செய்த அமெரிக்கா கடுமையாக வருத்தப்படும் - ஈரான் வெளியுறவு அமைச்சர்


ஈரானிய கடற்படை போர்க்கப்பலான டெனாவை மூழ்கடித்ததன் மூலம் அமெரிக்கா 'கடலில் ஒரு அட்டூழியத்தைச் செய்துள்ளது' என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டு, இது 'மிகவும் வருத்தத்திற்குரியது' எனவும் தெரிவித்துள்ளார்.


'ஈரானின் கடற்கரையிலிருந்து 2,000 மைல்கள் (3219 கிமீ) தொலைவில் கடலில் அமெரிக்கா ஒரு அட்டூழியத்தைச் செய்துள்ளது' 


இந்திய கடற்படையின் விருந்தினரான ப்ரிகேட் டெனா, 'கிட்டத்தட்ட 130 பேரை  ஏற்றிச்சென்ற  போது, சர்வதேச நீரில் எச்சரிக்கை இல்லாமல் தாக்கப்பட்டது.'


 "என் வார்த்தைகளைக் கவனியுங்கள்" அமெரிக்கா தான் அமைத்த முன்னுதாரணத்திற்கு கடுமையாக வருத்தப்படும் எனவும் ஈரான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.