கட்டாருக்கு தனது ஆதரவை வெளிப்படுத்திய அநுரகுமார
ஜனாதிபதி அநுரகுமார, கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி உடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடி, தற்போதைய பிரச்சினைகள் குறித்து ஆலோசித்து கட்டாருடனான தனது ஆதரவை வெளிப்படுத்தி உள்ளார்.
இதன்போது, கட்டாரில் உள்ள இலங்கையர்களின் நலன் குறித்து கட்டார் அமீர் உறுதியளித்துள்ளார்.
தற்போதைய சவால்களுக்கு மத்தியிலும் நிலையான எரிபொருள் விநியோகத்தைப் பேணுவதில் கட்டார் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் குறிப்பிட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Post a Comment