Header Ads



பிரதமர் ஹரிணி அமரசூரியவை இலக்குவைத்து பாலியல் ரீதியான, இழிவுபடுத்தும் தாக்குதல்


பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இலக்குவைத்து சமூக வலைத்தளங்களிலும் ஏனைய தளங்களிலும் முன்னெடுக்கப்படும் பாலியல் ரீதியான மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான தாக்குதல்களை 'பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு' கண்டித்துள்ளது. 


இந்தக் கண்டன அறிக்கையில் 188 சிவில் சமூகப் பிரதிநிதிகளும் 27 முன்னணி அமைப்புகளும் கையெழுத்திட்டுள்ளன. 


தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற ஒரு பிழையை அடிப்படையாகக் கொண்டு, பிரதமருக்கு எதிரான இழிவுபடுத்தல்கள்  தீவிரமடைந்துள்ளன.  இத்தகைய அச்சுறுத்தல்கள் தனிப்பட்ட விமர்சனங்கள் அல்ல, மாறாகப் பெண்களின் அரசியல் பங்கேற்பைத் தடுப்பதற்கான திட்டமிட்ட அரசியல் வன்முறையாகும். 


அத்துடன், இவ்வாறான கருத்துக்களைப் பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், சமூக வலைத்தளங்கள் இவ்வாறான தரக்குறைவான பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.