அநுரகுமார வழங்கிய வாக்குறுதிகள் எப்படி உள்ளன...?
'அனுர மீட்டர்' (Anura Meter) தேர்தல் விஞ்ஞாபன கண்காணிப்பானின் சமீபத்திய புதுப்பிப்பின்படி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க 2025 நவம்பர் மாதத்திற்குள் தனது முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் 10 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். அதேவேளை, மேலும் 10 வாக்குறுதிகள் முன்னேற்றத்தில் உள்ளன, 9 வாக்குறுதிகளில் முன்னேற்றம் இல்லை, மற்றும் ஒரு வாக்குறுதி தோல்வியடைந்துள்ளது.
இந்த மதிப்பீடானது 2024 ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்ட 30 முக்கிய வாக்குறுதிகளைக் கண்காணித்துள்ளதுடன், 2026 வரவு-செலவுத் திட்டத்தையும் உள்ளடக்கியுள்ளது; எனினும், இது 'டிட்வா' (Ditwah) சூறாவளிக்கு முன்னதாகவே பூர்த்தி செய்யப்பட்டது.
அனுர மீட்டரில் கண்காணிக்கப்படும் 30 வாக்குறுதிகளில் ஏழு வாக்குறுதிகள் மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளன. மக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என விரும்பும் மேலதிக வாக்குறுதிகளை முன்மொழிய Manthri மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.
கண்காணிப்படும் அனைத்து வாக்குறுதிகள் தொடர்பான முழுமையான விபரங்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளிலும் பின்வரும் இணைப்பில் பார்வையிடலாம்: https://manthri.lk/ta/anura-meter

Post a Comment