Header Ads



வீரவன்சவின் சத்தியாக்கிரகம் நிறைவு


கல்வி அமைச்சு முன்பாக நேற்று முதல் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வந்த சத்தியாக்கிரக போராட்டத்தை நிறைவு செய்வதாக அறிவித்துள்ளார்.


தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்வி மறுசீர்திருத்தங்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் எனவும், கல்வி அமைச்சர் பதவியை வகித்து வரும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், தரம் 6 கல்வி மறுசீர்திருத்தங்களை அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தீர்மானித்துள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.