மேலும் 6 நாடுகளுக்கு அமெரிக்காவிற்குள் நுழையத் தடை: ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் மேலும் 6 நாடுகளைச் சேர்த்துள்ளார்.
பாலஸ்தீனம், சிரியா, பர்கினா பாசோ, மாலி, நைஜர் மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளின் பிரஜைகள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
"வெளிநாட்டுப் பயங்கரவாதிகள்" மற்றும் ஏனைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டைப் பாதுகாப்பதே இதன் நோக்கம் எனக் கூறப்படுகிறது.
நேற்று (16) கையெழுத்திடப்பட்ட புதிய பிரகடனத்தின் மூலம், முழுமையான அல்லது பகுதியளவு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் 19 இலிருந்து 39 ஆக விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Post a Comment