200 தொன் உதவிப் பொருட்களுடன், இலங்கைக்கு வரும் பாகிஸ்தான் கப்பல்
சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், இலங்கைக்கு மேலதிகமாக 200 டன் மனிதாபிமான நிவாரணப் பொருட்களை பாகிஸ்தான் அனுப்பும் என அந்நாட்டின் மத்திய கடல்சார் விவகார அமைச்சர் முகமது ஜூனைத் அன்வர் சௌத்ரி தெரிவித்தார்.
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் அறிவுறுத்தலின் பேரில், 200 டன் நிவாரணப் பொருட்கள் கொண்ட கப்பல் கடல் வழியாக அனுப்பப்பட்டுள்ளதுடன், அது டிசம்பர் 13ஆம் திகதிக்குள் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சரக்குகளில் கூடாரங்கள், போர்வைகள், கம்பளிகள், கொசு வலைகள், முகாம் விளக்குகள், பாய்கள், உயிர்காப்பு அங்கிகள், ஊதப்பட்ட படகுகள், நீரை வெளியேற்றும் பம்புகள், மருந்துகள், பால்மா மற்றும் உடனடிப் பாவனைக்கான சிகிச்சை உணவு ஆகியவை அடங்கும்.
மனிதாபிமான மற்றும் உட்கட்டமைப்புச் சேதங்களில் இருந்து இலங்கை மீண்டு வர தொடர்ந்து உதவ பாகிஸ்தான் தயாராக இருப்பதாக ஜூனைத் சௌத்ரி மேலும் கூறினார்.

Post a Comment