Header Ads



வரலாற்று சிறப்புமிக்க இலங்கை - சவுதி அரேபியா வர்த்தக மன்றம் ஆரம்பம்



வரலாற்று சிறப்புமிக்க இலங்கை - சவுதி அரேபியா வர்த்தக மன்றம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது


ரியாத்தில் உள்ள FSC தலைமையகத்தில்  அமைச்சர் விஜித ஹெராத் முன்னிலையில் இலங்கை வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளன கூட்டமைப்பு (FCCISL) மற்றும் சவுதி சம்மேளன கூட்டமைப்பு (FSC) இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் முதல் இலங்கை - சவுதி அரேபியா  வர்த்தக மன்றம் ஆரம்பிக்கப்பட்டது


சவுதி அரேபியா இராச்சியத்திற்கான இலங்கை தூதர் அமீர் அஜ்வத் மற்றும் சவுதி வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ஹசன் அல்-ஹுவைசி ஆகியோர் FSC தலைவர் அல்-ஹுவைசி மற்றும் இலங்கை வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் தலைவர் கீர்த்தி குணவர்தன ஆகியோர் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர். 


சவுதி இராச்சியத்திற்கான இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத், இலங்கை-சவுதி அரேபியா வர்த்தக மன்றம்  நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு முயற்சி என்றும், இரு நாடுகளுக்கும் இடையில் நிறுவப்பட்ட முதல் முறையான B2B மன்றம் என்றும், இது 2  நட்பு நாடுகளுக்கு இடையே மிகவும் தேவையான நெருக்கமான மற்றும் நிலையான தனியார் துறை தொடர்புகளை மேம்படுத்துவதற்கான ஒரு ஊக்கியாக செயல்படும் என்றும் கூறினார்.



No comments

Powered by Blogger.