மோசமான பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டுவிட்ட அறிகுறி இந்த வரவுசெலவு திட்டத்தில் வெளிப்பட்டுள்ளது
இலங்கையின் வரவு செலவு திட்டம் புதிய அரசினால் 2 ஆவது முறையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எங்களது நாடு ஒரு மோசமான பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு விட்டதற்கான அறிகுறி இந்த வரவு செலவு திட்டத்தில் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
நாங்கள் கடனை இறுப்பதற்கு முடியாத ஒரு நாடு என்கின்ற நிலையில் இருந்து எங்களது கடனை மீளச் செலுத்துவதற்கான வருமானம் எங்களுக்கு வந்துவிட்டது என்பதை உலக நாணய நிதியம் அங்கீகரித்து இருப்பதற்கான அடையாளமாகவும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் பல அம்சங்கள் வெளிப்பட்டுள்ளன.
முதல் முறையாக துண்டு விழும் தொகை மிக குறைவாக காணப்படுகின்றது. நாங்கள் எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி விகிதம் அமைந்திருக்கிறது. மைனஸ் 7 சதவீதமாக வீழ்ந்து இருந்த பொருளாதார விகிதம் பிளஸ் 4.5 சதவீதமாக வந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்.
திருச்சி விமான நிலையத்தில் SLMC தலைவர் ரவூப் ஹக்கீம்
Post a Comment