Header Ads



தமிழகத்தில் இலங்கைப் பெண் உட்பட்ட 4 பெண்கள் மரணம்


தமிழ் நாட்டில் எண்ணூர் அருகே உள்ள கடலில் இலங்கை பெண் உட்பட்ட நான்கு பெண்கள் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சம்பவம் நேற்று ஏற்பட்ட நிலையில், சம்பவத்தில் 17 முதல் 30 வயதுக்குட்பட்ட 4 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.


அலையால் அடித்துச்செல்லப்பட்ட பின்னர் குறித்த பெண்களின் உடல்கள் அனைத்தும் அதே இடத்தில் கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை ஏதிலிகள் முகாமில் வசிக்கும் தேவகி செல்வம் என்ற பெண்ணும் தமிழகத்தை சேர்ந்த ஏனைய மூன்று பேருமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். 

No comments

Powered by Blogger.