Header Ads



20 கிராம் (ஐஸ்) வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை


20 கிராம் மெத்தம் பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்தமை தொடர்பான வழக்கில், பிரதிவாதியை குற்றவாளியாக இனங்கண்ட மன்னார்  மேல் நீதிமன்றம் ​அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


இந்தக் குற்றம்,  2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.


இது தொடர்பான வழக்கு,   மன்னார்   மேல் நீதிமன்ற நீதிபதி   எம். மிஹால்  முன்னிலையில் புதன்கிழமை (12) அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.


இவ்வழக்கில், வழக்குத்தொடருநர் தரப்பிற்காக அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன்   ஆஜராகி, வழக்கினை நெறிப்படுத்தினார். பிரதிவாதி  தரப்பிற்காக ஜனாதிபதி சட்டத்தரணி   யு. ஆர். டி சில்வா   ஆஜராகியிருந்தார்


(ரொசேரியன் லெம்பேட்)

No comments

Powered by Blogger.