பலஸ்தீனக் கொடியைத் தன் நெஞ்சோடு அணைத்து அமர்ந்திருக்கும் அந்தப் போராளிதான் கிரெட்டா துன்பெர்க்
பலஸ்தீனக் கொடியைத் தன் நெஞ்சோடு அணைத்து அமர்ந்திருக்கும் அந்தப் போராளிதான் கிரெட்டா துன்பெர்க். உண்மையான போராளி.... அந்த ஒருவரின் மன உறுதியின் விளைவே இந்தக் கடல்வழிப் போராட்டம்.
புறப்படும் முன் அவர் எழுதிய வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன,
அன்புள்ள காஸா, நாங்கள் உங்களைக் கவனிக்கிறோம். நீங்கள் வெறும் எண்களோ அல்லது ஐ.நா. தீர்மானங்களோ அல்ல. நாங்கள் உங்களை மறக்கவில்லை.
சியோனிச இஸ்ரேலின் சட்டவிரோதமான மற்றும் மனிதாபிமானமற்ற முற்றுகையை மீண்டும் அமைதியான முறையில் உடைக்க முயற்சிக்கும், மனிதாபிமான உதவிகளைச் சுமந்து செல்லும் காஸா நோக்கிய பயணத்தில் டஜன் கணக்கான படகுகள் உள்ளன. இது பல்வேறு அமைப்புகளின் கூட்டு முயற்சி ஆகும்.
காஸாவில் இனப்படுகொலை நடைபெறுவதாக ஃபலஸ்தீனியர்களும் மனித உரிமை அமைப்புகளும் நீண்ட காலமாகச் சொல்லி வந்ததை இப்போது ஐ.நா. ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
பல தசாப்தகால ஆக்கிரமிப்பு, இனவெறி, மற்றும் மரணத்தை விளைவிக்கும் அடக்குமுறையின் தொடர்ச்சியாக, ஒரு முழு இனத்தையுமே அழிக்கும் நோக்கத்துடன் சியோனிச இஸ்ரேல் திட்டமிட்டு மில்லியன் கணக்கான மக்களைப் பட்டினி போடுகிறது மற்றும் குண்டு வீசுகிறது. சர்வதேச சட்டத்தின் கீழ், இதைத் தடுக்கவும், தங்கள் பங்களிப்பை நிறுத்தவும், உண்மையான அழுத்தத்தை ஏற்படுத்தவும் நாடுகளுக்குச் சட்டப்பூர்வக் கடமைகள் உள்ளன.
அந்தக் கடமைகளை நிறைவேற்றுவதில் அவை முழுமையாகத் தவறுவது மட்டுமின்றி, அவ்வாறு செய்யாமல் இருக்க தீவிரமாக முடிவெடுக்கின்றன.
அதனால் தான், அதிகாரத்தில் உள்ள நமது இனவெறி ஆட்சியாளர்கள் இதில் தோல்வியடையும் போது, நாம் முன் வந்து செயல்படுகிறோம்.
காஸாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் நடக்கும் இந்த போர்க் குற்றங்களைத் தடுக்க முடியாத கட்டமைப்புகளை எதிர்த்து சவால் விடவே நாங்கள் கப்பல் ஏறுகிறோம். அனைத்து வகையான இனவெறி மற்றும் ஒடுக்குமுறை இல்லாத ஒரு உலகிற்காகவே நாங்கள் பயணிக்கிறோம்.
கிரெட்டா
Mubarak ravuthar

Post a Comment